மார்ச் 2024 இல் அதிகம் விற்பனையான ஹூண்டாய் கார்கள்
செய்தி முன்னோட்டம்
மார்ச் 2024இல் ஹூண்டாய்யின் விற்பனை 4.7% அதிகரித்து, மொத்தம் 53,001 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
இந்த எண்ணிக்கை முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் விற்பனையான 50,600 யூனிட்களை விட குறிப்பிடத்தக்க உயர்வை காட்டுகிறது.
மேலும், ஹூண்டாய் இந்த ஆண்டு பிப்ரவரியில் 50,201 யூனிட்களை மட்டுமே விற்றிருந்த நிலையில், மார்ச் மாதத்தில் அதன் MoM அளவும் 5.6% அதிகரித்ததுள்ளது.
இதற்கிடையே, நேர்மறையான விற்பனை புள்ளிவிவரங்கள் இருந்தபோதிலும், ஹூண்டாய்இன் சந்தைப் பங்கு 15.1% இலிருந்து 14.3% ஆக குறைந்துள்ளது.
இந்த சிறிய சரிவு மார்ச் 2024க்கான ஒட்டுமொத்த உற்பத்தியாளர்களின் விற்பனை தரவரிசையில் நிறுவனத்தை இரண்டாவது இடத்தில் வைத்துள்ளது.
சந்தைப் பங்கில் ஏற்படும் மாற்றம் நுகர்வோர் விருப்பம் அல்லது அதிகரித்த போட்டியின் மாற்றத்தை இந்த சரிவு குறிக்கிறது.
விற்பனை
ஹூண்டாய் கார்களில் அதிகம் விற்கப்பட்டவை எவை?
இந்த மாதத்தில் அதிகம் விற்கப்பட்ட கார்களின் வரிசையில், ஹூண்டாய் க்ரெட்டா விற்பனையில் முன்னணியில் உள்ளது.
இது 16,458 யூனிட்கள் விற்பனையாகி 17% ஆண்டு விற்பனை அதிகரிப்பிற்கு பங்களித்தது.
இது முந்தைய ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனையான 14,026 யூனிட்களை விட குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
இருப்பினும், வென்யூ காம்பாக்ட் SUV, முந்தைய ஆண்டின் 10,024 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 9,614 யூனிட்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
அடுத்ததாக ஹூண்டாய் எக்ஸ்டெர் மூன்றாவது இடத்தைப் பிடித்ததுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹூண்டாய் எக்ஸ்டர், 2023ஆம் ஆண்டு சந்தையில் அறிமுகமானதில் இருந்து மொத்தம் 8,475 யூனிட்கள் விற்பனையாகி விற்பனையில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது.ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ், i20 பிரீமியம் ஆகியவை குறைந்த அளவே விற்கப்பட்டுள்ளது.