ரூ.4 லட்சம் வரை தள்ளுபடியுடன் கிடைக்கும் ஹூண்டாய் கார்கள்
நிதியாண்டு முடிவடைய உள்ள நிலையில், ஹூண்டாய் பல்வேறு மாடல்களில் கவர்ச்சிகரமான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது. ரூ.10,000 முதல் ரூ.4 லட்சம் வரை தள்ளுபடி செய்யப்படுகின்றன. எக்ஸ்டர், க்ரெட்டா, மற்றும் அயோனிக் 5 ஆகியவற்றை தவிர, MY2023 மற்றும் MY2024 ஆகிய இரண்டு மாடல்களுக்கும் இந்த தள்ளுபடிகள் பொருந்தும். ஹூண்டாய் கோனா EVக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. உலகளாவிய பேட்டரி பேக் விலையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக, ஹூண்டாய் கோனா EVயின் விலையும் குறைந்துள்ளது. MY2024 மாடல்களான கிராண்ட் ஐ10 நியோஸ் எம்டி(Non-CNG) வகைகளுக்கு மொத்தமாக ரூ.28,000 தள்ளுபடியும், AMT பதிப்புகளுக்கு ரூ.18,000 தள்ளுபடியும், CNG வகைகளுக்கு அதிகபட்சமாக ரூ.43,000 தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன.
கிராண்ட் ஐ10 நியோஸ் , ஆரா, i20இன் தள்ளுபடிகள்
ஆரா சிஎன்ஜி வகைகளுக்கு மொத்தமாக ரூ.33,000 தள்ளுபடி வழங்கப்படுகின்றன. பழைய i20 N லைன் மாடல்களுக்கு அதிகபட்சமாக ரூ.60,000 தள்ளுபடியும், புதிய i20/i20 N லைன் மாடல்களுக்கு ரூ.5,000 மற்றும் ரூ.20,000 ரொக்கத் தள்ளுபடியும் வழங்கப்படுகின்றன. MY2024 ஹூண்டாய் வென்யூ, குறிப்பிட்ட மாடல்களின் அடிப்படையில் மாறுபட்ட பணத் தள்ளுபடிகள் மற்றும் பரிமாற்ற போனஸ்களை வழங்குகிறது. இந்த மாடல்களை வாங்குபவர்கள் ரூ.30,000 ரொக்க தள்ளுபடி மற்றும் ரூ.25,000 பரிமாற்ற போனஸை பெற்றுக்கொள்ளலாம். அல்கசாரின் பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களுக்கு ரூ.15,000 ரொக்க தள்ளுபடியும் ரூ.20,000 பரிமாற்ற போனஸும் கிடைக்கிறது.