Page Loader
Splendor-க்கு போட்டியாக 135 KM செல்லும் Hop Oxo கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!
HOP OXO e-bike இந்தியாவில் அறிமுகம்

Splendor-க்கு போட்டியாக 135 KM செல்லும் Hop Oxo கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக் அறிமுகம்!

எழுதியவர் Siranjeevi
Feb 09, 2023
01:34 pm

செய்தி முன்னோட்டம்

Hop Oxo என்ற கம்யூட்டர் எலக்ட்ரிக் பைக்கை இந்தியாவில் முதலில் வெளியிட்டுள்ளனர் ஐதராபாத் நகரை சேர்ந்த Hop Electric நிறுவனம். பெட்ரோல் பைக்குகள் நிகராக எலெக்ட்ரிக் பைக்குகள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக ஸ்கூட்டர் செக்மென்ட்டில் ICE ரக ஸ்கூட்டர்களுக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகப்பெரிய சவால் தருகின்றன. அந்த வகையில், மக்களின் தினசரி பயன்பாட்டிற்கு கம்யூட்டர் பைக்குகள் பிரபலமாகி வருகிறது. Hop Oxo என்ற இந்த பைக் 125cc ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் பைக் போன்ற டிசைன் கொண்டுள்ளது. இந்த பைக்கில் 3.75 KWH லித்தியம் அயன் பேட்டரி உள்ளது. இதன் ரேஞ்சு 135 KM முதல் 150 KM கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் 90 KM செல்கிறது.

HOP OXO e-bike

HOP OXO எலெக்ட்ரிக் பைக்கின் முக்கிய பயன்பாடுகள் இங்கே...

இதில் ஒரு 5 இன்ச் ஸ்மார்ட் LCD டிஸ்பிலே வசதி, 4G LTE, CAT4, மொபைல் ஆப் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பைக்கை 850W சார்ஜ்ர் மூலமாக சார்ஜ் செய்தால் 80% சார்ஜிங் நடக்க 4 மணிநேரம் ஆகும். இதில், மொத்தமாக 4 ரைடிங் மோட் வசதிகள் உள்ளன. (Eco, Power, Sport, Reverse) மோட் மற்றும் கூடுதலாக Sinusoidal FOC Vector Control வசதிகளை இந்த பைக் கொண்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக் முதல்காட்டமாக ஐதராபாத் நகரில் 10 இடங்களில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. விலை விபரங்கள் இந்த பைக் 1.60 லட்சம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதன் Pro Package 1.80 லட்சம் ரூபாய் விலையில் கிடைக்கிறது.