மென்பொருள் சிக்கல்; எலக்ட்ரிக் கார் விற்பனையை நிறுத்திய ஜெனரல் மோட்டார்ஸ்
ஜெனரல் மோட்டார்ஸ் பெரிய மென்பொருள் சிக்கல்கள் காரணமாக அதன் புதிய செவர்லே பிளேசர் எலக்ட்ரிக் கார் விற்பனையை தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. செவ்ரோலெட் கம்யூனிகேஷன்ஸ் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் சாட் லியோன்ஸ், ஜெனரல் மோட்டார்ஸ் மென்பொருள் தரம் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும், தீர்வு கிடைத்தவுடன் விற்பனை மீண்டும் தொடரும் என்று தெரிவித்துளளார். செவ்ரோலெட் துணைத் தலைவர் ஸ்காட் பெல் இதுகுறித்து கூறுகையில், வாடிக்கையாளர் திருப்தியே அவர்களின் முதன்மையான முன்னுரிமை என்றும், அதற்காகவே இப்போது புதிய டெலிவரிகளை இடைநிறுத்துவதாக கூறியுள்ளார்.
பிளேசர் எலக்ட்ரிக் காரில் உள்ள முக்கிய தவறுகள்
2024 செவர்லே பிளேசர் எலக்ட்ரிக் கார் ஆர்எஸ் ஏடபிள்யுடி, நீண்ட கால சோதனைக்காக வாங்கப்பட்டது என்றும், அதில் தீர்க்கப்படாமல் உள்ள கோடிங் தவறுவதால் இரண்டு வாரங்களாக டீலர்ஷிப் மட்டத்தில் சிக்கலை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, அல்டியம் மூலம் இயங்கும் பிற ஜெனரல் மோட்டார்ஸ் எலக்ட்ரிக் கார்களின் உரிமையாளர்களும் இதே போன்ற சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட வாகனங்களின் சரியான எண்ணிக்கையை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவே என கூறுகின்றனர். இந்த சிக்கல்கள் முழுமையாக தீர்ப்பட்டு பிளேசர் எலக்ட்ரிக் கார் மீண்டும் வர சிறிது காலம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.