ரூ.10 லட்சம் விலைக்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா ஆட்டோமொபைல் சந்தையானது வசதிகள் மற்றும் ஆடம்பரத்தைக் கடந்து, தேவை மற்றும் மதிப்புக்கேற்ற அடிப்படையிலேயே இயங்கி வருகிறது.
அதிக விலை கொண்ட கார்களை விட, குறைவான விலையில் தேவைக்கேற்ப வசதிகள் கொண்ட கார்களையே மக்கள் அதிகம் விருப்புவார்கள். அப்படி ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் சிறந்த பெட்ரோல் கார்களின் பட்டியல் இது.
ரெனோ க்விட்:
எஸ்யூவி போன்ற தோற்றத்தைக் கொண்ட தொடக்கநிலை ஹேட்ச்பேக் ரெனோ க்விட். 5 சீட்டர் கேபின் கொண்ட இந்தக் காரில் 67hp பவர் மற்றும் 91Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.0-லிட்டக் பெட்ரோல் இன்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்தியாவில் ரூ.4.7 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த ரெனோ க்விட்.
பெட்ரோல் கார்
மாருதி சுஸூகி வேகன்R:
இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் ஹேட்ச்பேக் மாடல் வேகன்R. 67hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.0-லிட்டர் பெட்ரோல் இன்ஜின், 89hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் 56hp பவரைக் கொண்ட 1.0-லிட்டர் CNG ஆகிய மூன்று இன்ஜின் ஆப்ஷன்களைக் கொண்டிருக்கிறது வேகன்R.
இந்தியாவில் ரூ.5.54 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த ஹேட்ச்பேக்.
டாடா டியாகோ:
டாடாவின் குறைந்தவிலை ஹேட்ச்பேக் மாடல்களுள் ஒன்ற டியாகோ. இரண்டு வகையான ட்யூன்களுடன் 1.2 லிட்டர் ரெவ்ட்ரான் பெட்ரோல் இன்ஜினைக் கொண்டிருக்கிறது டியாகோ ஹேட்ச்பேக்.
இந்தியாவில் ரூ.5.59 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த டாடா டியாகோ ஹேட்ச்பேக் மாடல்.
பட்ஜெட் கார்
ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ்:
82hp பவர் மற்றும் 113.8Nm டார்க்கை உற்பத்தி செய்யக்கூடிய 1.2-லிட்டர் கப்பா பெட்ரோல் இன்ஜினைக் கொண்ட மாடலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹூண்டாயின் கிராண்டு i10 நியாஸ் பெட்ரோல் ஹேட்ச்பேக்.
இந்தியாவில் ரூ.5.84 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த 5 சீட்டர் கேபின் கொண்ட ஹேட்ச்பேக்.
சிட்ரன் C3:
இந்தப் பட்டியலிலேயே அதிக விலை கொண்ட மாடல் இந்த சிட்ரன் C3. 82hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2-லிட்டர் பெட்ரோல் மற்றும் 110hp பவரை வெளிப்படுத்தக்கூடிய 1.2-லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு வகையான பெட்ரோல் இன்ஜின்களைக் கொண்டிருக்கிறது C3.
இந்தியாவில் ரூ.6.16 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் தொடங்கி விற்பனை செய்யப்பட்டு வருகிறது இந்த சிட்ரன் C3.