'சேடக்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் 2024 பதிப்பை இந்தியாவில் வெளியிட்டது பஜாஜ்
பஜாஜ் ஆட்டோ தனது ஒரே எலக்ட்ரிக் ஸ்கூட்டரான சேடக்கின் 2024 பதிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வகைகளில் கிடைக்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 1.15 லட்சம் மற்றும் ரூ. 1.35 லட்சத்துக்கு விர்க்கப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக், ஏதர் எனர்ஜி, டிவிஎஸ் மோட்டார் கம்பெனி மற்றும் ரிவர் போன்ற ஸ்கூட்டர்களுக்கு இந்த ஸ்கூட்டர் போட்டியாக உள்ளது. நேற்று புதிதாக வெளியாகிய ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர் குறித்த முழு தகவலையும் இந்த இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.
2024 பஜாஜ் சேடக் புதிய அம்சங்கள்
2024 பஜாஜ் சேடக் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஒரு ஓவல் வடிவ LED ஹெட்லைட் உள்ளது. அது போக, இந்த ஸ்கூட்டரில் ஒரு தட்டையான ஃபுட்போர்டு, வடிவமைப்பாளர் கண்ணாடிகள், 5.0-இன்ச் TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் மெட்டாலிக் பாடி பேனல்கள் ஆகியவை நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பிற்காக, இதில் ஒரு டிஸ்க்/டிரம் பிரேக் அமைப்பு, ஒரு ஒருங்கிணைந்த பிரேக்கிங் சிஸ்டம், ஒரு ஒற்றை பக்க முன் போர்க் மற்றும் பின்புற மோனோ-ஷாக் யூனிட் ஆகியவை உள்ளன. இந்த மின்சார ஸ்கூட்டர் 3.2kWh பேட்டரி பேக்குடன் இணைக்கப்பட்ட 3.8kW மின்சார மோட்டாரில் இயங்குகிறது. எனவே, இதனால், 127km வரை பயணிக்க முடியும்.