இந்தியாவில் வெளியானது ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
செய்தி முன்னோட்டம்
ஏதர் எனர்ஜி நிறுவனம் '450 அபெக்ஸ்' எலக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பு ஏதர் எனர்ஜி நிறுவனம் வெளியிட்ட '450X' மாடல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட மாடல் இதுவாகும்.
ரூ. 1.89 லட்சத்திற்கு விற்பனையாகும் ஏதர் எனர்ஜி நிறுவனத்தின் இந்த மாடல் தான் பிராண்டின் மிகவும் விலையுயர்ந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டராகும்.
ஓலா எஸ்1 ப்ரோ, டிவிஎஸ் எக்ஸ் மற்றும் சிம்பிள் ஒன் போன்ற ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக இந்த ஸ்கூட்டர் வெளியாகியுள்ளது.
100km/h அதிகபட்ச வேகத்தில் பயணிக்கும் இந்த ஸ்கூட்டரின் அக்ஸ்ப்லெரேஷன் நேரம் 0-40km/h ஆகும். அதாவது, வெறும் 2.9 வினாடிகளில் 0-40km/h வேகத்திற்கு அக்ஸ்ப்லெரேட்டர் கொடுக்க முடியும்.
ட்ஜ்வ்கின்ள
செயல்திறன் மேம்பாடுகள் மற்றும் புதிய அம்சங்கள்
450 அபெக்ஸின் பேட்டரி திறன் 3.7kWh ஆக உள்ளது. ஆனால் தற்போது அது 157km என்ற உயர் சான்றளிக்கப்பட்ட வரம்பையும், மேம்படுத்தப்பட்ட TrueRangeஐயும்(உலக வரம்பு) வழங்குகிறது.
கூடுதலாக, இந்த ஸ்கூட்டரில் ஒரு புதிய "வார்ப் பிளஸ்" ரைடிங் மோடு, "மேஜிக் ட்விஸ்ட்" நெகடிவ் த்ரோட்டில், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் அமைப்பு ஆகியவை உள்ளன.
மேலும், கண்ணைக் கவரும் இண்டியம்நீல வண்ணத்தில் இந்த ஸ்கூட்டர் வெளியிடப்பட்டுள்ளது.
அது தவிர, ஏதர் 450 அபெக்ஸ் அதன் வெளிப்படையான பக்க பேனல்களால் பிற ஸ்கூட்டர்களில் இருந்து தனித்து நிற்கிறது.
ஐந்து ஆண்டுகள் அல்லது 60,000 கிமீ நீட்டிக்கப்பட்ட பேட்டரி உத்தரவாதத்துடன் இந்த ஸ்கூட்டர் விற்கப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.