Page Loader
தீ அபாயம்; இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை திரும்பப் பெறுகிறது ஆடி
தீ அபாயங்கள் காரணமாக இந்தியாவில் கார்களை திரும்பப் பெறும் ஆடி

தீ அபாயம்; இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை திரும்பப் பெறுகிறது ஆடி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 15, 2024
05:42 pm

செய்தி முன்னோட்டம்

ஆடி இந்தியா தனது முதன்மையான எலக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் வரிசையான e-tron GT மாடலை சாத்தியமான தீ அபாயங்கள் காரணமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட e-tron GT மற்றும் RS e-tron GT மாடல்களின் 31 கார்கள் இந்த நடவடிக்கை மூலம் திரும்பப் பெறப்படுகிறது. இந்த வாகனங்கள் அனைத்தும் ஜனவரி 9, 2020 மற்றும் பிப்ரவரி 16, 2024க்கு இடையில் தயாரிக்கப்பட்டன. சிக்கலைத் தீர்க்க ஆடி நேரடியாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை அணுகும். தேவையான பழுதுகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். உயர் மின்னழுத்த பேட்டரியின் சில தனிப்பட்ட செல் தொகுதிகளில் உள்ள தொழில்நுட்ப கோளாறு காரணமாக திரும்பப் பெறுதல் மேற்கொள்ளப்படுகிறது.

பிரச்சினை

என்ன பிரச்சினை?

சப்ளையர் மூலம் பேட்டரி மாட்யூல்களை தயாரிக்கும் போது இந்த முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்று ஆடி கண்டறிந்துள்ளது. சில நிபந்தனைகளின் கீழ், இந்த முறைகேடுகள் பேட்டரி அதிக வெப்பமடைவதற்கு வழிவகுக்கலாம். மேலும் வாகனத்தில் இருப்பவர்கள் மற்றும் அருகிலுள்ள நபர்களுக்கு காயம் மற்றும் சொத்து சேதம் போன்ற ஆபத்துகளுடன் தீவிர அபாயத்தை ஏற்படுத்தலாம். இந்த ஆண்டு e-tron GT வரம்பிற்கு இது இரண்டாவது ரீகால் ஆகும். அக்டோபரில் முந்தைய ரீகால் ஆனது, ஜனவரி 9, 2020 மற்றும் ஜூன் 12, 2024 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட 37 யூனிட்களை பாதிக்கும் சாத்தியமான பிரேக் ஹோஸ் குறைபாடு தொடர்பான உலகளாவிய சிக்கல் காரணமாக மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.