தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாருதி சுஸூகி ஸ்விப்ட்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸூகியின் கார் மாடல்கள் ஆண்டு இறுதி சலுகைகளுடன் தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மாருதியின் பிரபலமான கார் மாடல்களுள் ஒன்றான ஸ்விப்ட், ரூ.49,000 சலுகை மற்றும் தள்ளுபடிகளுடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தள்ளுபடியாக ரூ.25,000, பரிமாற்ற சலுகையாக ரூ.20,000 மற்றும் கார்ப்பரேட் சலுகையாக ரூ.4,000 என மொத்தம் ரூ.49,000 சலுகை மற்றும் தள்ளுபடியுடன் கிடைக்கிறது மாருதி சுஸூகி ஸ்விப்ட்.
இந்தியாவில் ரூ.5.99 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்விப்ட் மாடலானது, டாடா டியாகோ மற்றும் ஹூண்டாய் கிராண்டு i10 நியாஸ் ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மாருதி
புதிய ஸ்விப்டை உருவாக்கி வரும் மாருதி சுஸூகி:
தற்போது ஸ்விப்ட் மாடலுக்கு பல்வேறு சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்பட்டிருக்கும் போதிலும், இவை கடந்த விழாக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகையை விடக் குறைவு தான் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், புதிய நான்காம் தலைமுறை ஸ்விப்டை விரைவில் இந்தியாவில் வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது மாருதி சுஸுகி நிறுவனம். இந்த புதிய ஸ்விப்ட் மாடலை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் அந்நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு புதிய மாற்றங்கள் மற்றும் மேம்பாடுகளைக் கொண்டிருக்கும் புதிய தலைமுறை ஸ்விப்ட் ஹேட்ச்பேக் மாடலை இந்திய சாலைகளில் மாருதி சுஸூகி நிறுவனம் சோதனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.