Loading...
ஹோண்டா ஆக்டிவாவிற்கு சவால்! மெட்டல் பாடி வசதியுடன் களமிறங்கும் புதிய ஏதர் கொனார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
மெட்டல் பாடி வசதியுடன் களமிறங்கும் புதிய ஏதர் கொனார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

ஹோண்டா ஆக்டிவாவிற்கு சவால்! மெட்டல் பாடி வசதியுடன் களமிறங்கும் புதிய ஏதர் கொனார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 20, 2026
04:13 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் முன்னணி மின்சார வாகன உற்பத்தியாளரான ஏதர் எனர்ஜி, தனது புதிய கொனார்க் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் புதிய டீசர் வீடியோவை வெளியிட்டுள்ளது. பெங்களூருவில் வரும் ஆகஸ்ட் 29 அன்று நடைபெறவுள்ள ஏதர் கம்யூனிட்டி தின நிகழ்வில் இந்த இ-ஸ்கூட்டர் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. ஏதர் நிறுவனம் இதுவரை உற்பத்தி செய்த பிளாஸ்டிக் அல்லது ஃபைபர் மாடல்களுக்கு மாற்றாக, முதன்முறையாக மெட்டல் பாடி பேனல்களுடன் இந்த புதிய ஸ்கூட்டரை சந்தையில் அறிமுகப்படுத்துகிறது.

மெட்டல் பாடி

மெட்டல் பாடி அமைப்பை உறுதி செய்த சிஇஓ

ஏதர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா, கொனார்க் ஸ்கூட்டரின் பாடி பேனலில் காந்தங்களைப் பொருத்தி சோதிக்கும் வீடியோவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இது கொனார்க் ஸ்கூட்டர் மெட்டல் பாடியைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

இந்திய மின்சார ஸ்கூட்டர் சந்தையில் பஜாஜ் சேத்தக் மட்டுமே தற்போது மெட்டல் பாடி அமைப்பைக் கொண்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா போன்ற பாரம்பரிய பெட்ரோல் ஸ்கூட்டர்களைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ADVERTISEMENT

இஎல் பிளாட்ஃபார்ம்

புதிய 'இஎல்' பிளாட்ஃபார்ம் மற்றும் வடிவமைப்பு அம்சங்கள்

ஏதர் நிறுவனம் பிரத்யேகமாக உருவாக்கியுள்ள புதிய 'இஎல்' கட்டமைப்பின் கீழ் தயாரிக்கப்படும் முதல் மின்சார ஸ்கூட்டர் கொனார்க் ஆகும்.

ஏதர் 450 சீரிஸ் மற்றும் ரிஸ்டா மாடல்களை விடக் குறைந்த விலையில், அதிக நடுத்தரக் குடும்பங்களை சென்றடையும் நோக்கில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீண்ட ஒற்றை இருக்கை, விசாலமான லெக்போர்டு, முகப்பில் அகலமான எல்இடி டிஆர்எல் விளக்குகள், 14-இன்ச் முன்பக்க சக்கரம் மற்றும் 12-இன்ச் பின்பக்க சக்கரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

பேட்டரி வரம்பு

எதிர்பார்க்கப்படும் பேட்டரி வரம்பு மற்றும் மாடல்கள்

கொனார்க் மின்சார ஸ்கூட்டர் பெட்ராக் எனும் புதிய பேட்டரி குடும்பத்தின் கீழ் 100 கிமீ, 125 கிமீ, 160 கிமீ மற்றும் 200 கிமீ வரையிலான ஐடிசி சான்றளிக்கப்பட்ட ரேஞ்ச் ஆப்ஷன்களில் கிடைக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சலுகை 'S' பிரிவில் 4 மாடல்களாகவும், 'Q' பிரிவில் 2 மாடல்களாகவும் வர வாய்ப்புள்ளது.

மேலும், ஸ்கூட்டரின் ஆரம்ப விலையைக் குறைக்கப் பேட்டரி-ஆஸ்-ஏ-சர்வீஸ் முறையையும் நிறுவனம் வழங்கப் பரிசீலித்து வருகிறது.

விலை

விலை விவரங்கள் மற்றும் சந்தைப் போட்டிகள்

ஆகஸ்ட் 29 அன்று முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ள நிலையில், ஏதர் கொனார்க் ஸ்கூட்டர் ரூ.90,000 முதல் ரூ.1.10 லட்சம் வரையிலான குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது.

இந்த புதிய மாடல் சந்தையில் டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஓலா எஸ்1 எக்ஸ் மற்றும் ஹீரோ விடா விஎக்ஸ்2 ஆகிய முன்னணி குடும்ப மின்சார ஸ்கூட்டர்களுக்கு மிகக் கடுமையான போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT