Loading...
இந்தியாவில் மின்சார கார் விற்பனை 3 லட்சத்தை தாண்டி புதிய சாதனை; டாப் நிறுவனங்கள் எவை?
இந்தியாவில் மின்சார கார் விற்பனை 3 லட்சத்தை தாண்டி புதிய சாதனை

இந்தியாவில் மின்சார கார் விற்பனை 3 லட்சத்தை தாண்டி புதிய சாதனை; டாப் நிறுவனங்கள் எவை?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 13, 2026
10:23 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மின்சார பயணிகள் வாகனச் சந்தை 2026 ஆம் ஆண்டில் இமாலய வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வாகன் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஜனவரி 1 முதல் நவம்பர் 9 வரை மொத்தம் 3,04,701 மின்சார கார்கள் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்தை விட 66 சதவீதம் அதிகமாகும். ஜூன் மாதம் முதல் தொடர்ந்து 5 மாதங்களாக மாதாந்திர விற்பனை 30,000 யூனிட்களைக் கடந்துள்ளது. செப்டம்பர் மாதத்தில் மட்டும் அதிகபட்சமாக 38,440 மின்சார கார்கள் விற்பனையாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளன.

முதலிடத்தில் டாடா

முதலிடத்தைத் தக்கவைத்த டாடா மற்றும் 2-வது இடத்திற்கு முன்னேறிய மஹிந்திரா

நிறுவனங்கள் வாரியான விற்பனையில் டாடா மோட்டார்ஸ் 1,20,895 மின்சார கார்களை விற்பனை செய்து 40 சதவீத சந்தைப் பங்குடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

நெக்ஸான் இவி மற்றும் பஞ்ச் இவி ஆகிய மாடல்கள் டாடாவின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக அமைந்துள்ளன.

மறுபுறம், மஹிந்திரா நிறுவனம் 69,660 மின்சார எஸ்யூவிகளை விற்பனை செய்து 23 சதவீத சந்தைப் பங்குடன் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதன் மூலம் 56,988 கார்களை விற்பனை செய்த எம்ஜி மோட்டார் நிறுவனம் 3-வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

முன்னேறிய வின்ஃபாஸ்ட்

மாருதி, ஹூண்டாயை முந்தி 4-வது இடம் பிடித்த வின்ஃபாஸ்ட் நிறுவனம்

இந்திய சந்தையில் நுழைந்து 15 மாதங்களே ஆன வியட்நாம் நிறுவனமான வின்ஃபாஸ்ட் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனம் 15,867 மின்சார கார்களை விற்பனை செய்து 5 சதவீத சந்தைப் பங்குடன் 4-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.

இதன் மூலம் பாரம்பரிய நிறுவனங்களான மாருதி சுஸூகி (12,390 யூனிட்கள்), கியா (7,612 யூனிட்கள்), பிஒய்டி (6,755 யூனிட்கள்) மற்றும் ஹூண்டாய் (6,013 யூனிட்கள்) ஆகியவற்றை வின்ஃபாஸ்ட் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

ADVERTISEMENT

சொகுசு கார்கள்

7,000 யூனிட்களை கடந்த சொகுசு மின்சார கார்கள் மற்றும் டெஸ்லா வருகை

சாதாரண கார்களைப் போலவே சொகுசு மின்சார கார்கள் பிரிவும் 29 சதவீத வளர்ச்சியுடன் 7,323 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

இதில் பிஎம்டபிள்யூ நிறுவனம் 4,273 கார்களை விற்பனை செய்து 58 சதவீதப் பங்குடன் முதலிடத்தில் உள்ளது.

மெர்சிடிஸ்-பென்ஸ் 1,416 யூனிட்களுடன் 2-வது இடத்தில் நீடிக்கிறது.

அமெரிக்க நிறுவனமான டெஸ்லா 1,153 கார்களை விற்பனை செய்து 3-வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆண்டின் இறுதிக்குள் மொத்த விற்பனை 3.6 லட்சத்தை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT