வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா: 129 நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
கொசுவால் ஏற்படும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள் அதிகமாக பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலநிலை மாற்றம், வெப்பமயமாதலுக்கு மத்தியில் டெங்கு, சிக்குன்குனியா போன்ற வைரஸ்கள் வேகமாகவும் அதிகமாகவும் பரவுவதால் தொற்றுநோய் அதிகரிக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு(WHO) கூறியுள்ளது.
மேலும், ஜிகா வைரஸும் அதிகம் பரவ வாய்ப்பிருப்பதாக அந்த அமைப்பு கூறி இருக்கிறது.
இந்த மூன்று தொற்றுநோய்களும் ஏடிஸ் ஈஜிப்டி கொசுக்கள் சுமந்து செல்லும் ஆர்போவைரஸால் ஏற்படுகின்றன.
இந்த வைரஸ்கள் புவி வெப்பமாவதால் புதிய வேகத்தில் பரவ தொங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உலகம்
129 நாடுகள் டெங்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் உள்ளன
WHOஇன் டெங்கு மற்றும் ஆர்போவைரஸ் முன்முயற்சியை ஒருங்கிணைக்கும் ராமன் வேலாயுதன், "வெக்டர் கொசுக்களின் பரவலை எளிதாக்குவதில் காலநிலை மாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்த வைரஸ்கள் புதிய பகுதிகளில் பெரிய அளவில் பரவ தொடங்கியுள்ளதாகவும் அதை கட்டுப்படுத்த அவசர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் வேலாயுதன் வரியுறுத்தியுள்ளார்.
129 நாடுகள் டெங்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் உள்ளன. இதில் ஏற்கனவே நோய் பரவியுள்ள 100 நாடுகளும் அடங்கும்.
சமீபத்திய ஆண்டுகளில் இதனால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கைகள் அதிவேகமாக வளர்ந்துள்ளன. 2000ஆம் ஆண்டில் சுமார் அரை மில்லியனாக இருந்த பரவல் 2019இல் சுமார் 5.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.