மருத்துவமனை தாக்குதலில் இஸ்ரேல் குற்றம் சாட்டும் இஸ்லாமிய ஜிகாத் என்பது யார்?
செய்தி முன்னோட்டம்
நேற்று இரவு காசா மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பின்னால், பாலஸ்தீனத்தை சேர்ந்த இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் குற்றம்சாட்டி இருந்தார்.
யார் இந்த இஸ்லாமிய ஜிகாத் அமைப்பு? அவர்கள் ஹமாஸ்-இன் ஒரு பிரிவினரா?
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத், ஹமாஸ் அல்ல, ஆனால் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஹமாஸுடன் இணைந்துள்ளது.
ஹமாஸைப் போலவே, அவர்களும் ஈரானிடமிருந்து நிதி மற்றும் ஆதரவைப் பெறுகிறார்கள் என கூறப்படுகிறது.
அக்டோபர்-7 தொடங்கி, தற்போதும் தொடரும், இஸ்ரேலின் இராணுவத்திற்கும் ஹமாஸுக்கும் இடையேயான போரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இந்த காசா மருத்துவமனை குண்டுவெடிப்பு பார்க்கப்படுகிறது.
இதற்கு மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய ஜிஹாத் தான் காரணம் என்று இஸ்ரேல் குற்றம் சாட்டியதை அந்த அமைப்பு மறுத்துள்ளது.
card 2
இஸ்லாமிய ஜிகாத் என்ன சொல்கிறது?
"காசாவில் உள்ள பாப்டிஸ்ட் அரேபிய தேசிய மருத்துவமனை மீது குண்டுவீசி நடத்திய கொடூரமான படுகொலைக்கான பொறுப்பிலிருந்து தப்பிக்க, சியோனிச எதிரி தனது வழக்கமான பொய்களின் மூலம் மற்றும் பாலஸ்தீனத்தில் உள்ள இஸ்லாமிய ஜிஹாத் இயக்கத்தின் மீது குற்றம் சாட்டுவதன் மூலம், கடுமையாக முயற்சி செய்கிறது." என அந்த அமைப்பு பதில் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனம், இஸ்ரேலையோ, அதன் அரசையோ, தனி நாடாக அங்கீகரிக்க வில்லை. அதன் வெளிப்பாடாகத்தான், இஸ்ரேல்-லை 'சியோனிச எதிரி' என குறிப்பிடுகிறது.
card 3
இஸ்ரேல் மேற்கோள் காட்டும் யார் இவர்கள்?
இஸ்லாமிய ஜிஹாத், ஹமாஸ் பயங்கரவாதிகள் அல்ல.
ஆனால் இரண்டு அமைப்பும் இஸ்ரேலுக்கு எதிராகப் போராடுகின்றன.
பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் என்பது காஸாவை தளமாகக் கொண்ட ஒரு ஆயுதக் குழு.
இது காஸாவில் இரண்டாவது பெரிய ஆயுதக் குழுவாகும்.
இஸ்லாமிய ஜிஹாத் 1980 களில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடுவதற்காக காசா பகுதியில் நிறுவப்பட்டது.
இஸ்லாமிய ஜிகாத், ஹமாஸ் போன்றே இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாகக் கருதப்படுகிறது.