
500 பேரை பலி கொண்ட காசா மருத்துவமனை தாக்குதல்
செய்தி முன்னோட்டம்
12-வது நாளாக தொடரும் இஸ்ரேல் - ஹமாஸ் போரில் இரு பக்கமும் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கூறப்படும் வடக்கு காசாவை குறி வைத்து தரைவழி தாக்குதல் நடத்த போவதாக இஸ்ரேல் அறிவித்தது.
இதனால், பொதுமக்களை தெற்கு காசாவிற்கு இடம்பெயருமாறு அறிவுறுத்தி, அதற்கு கெடுவும் விதித்தது.
இந்த நிலையில், தெற்கு காசா பகுதியில் அமைந்துள்ள ரபா மற்றும் கான் யூனிஸ் நகரின் மீது நேற்று இரவு குண்டு வீசப்பட்டது.
அதில், அல்-அக்லி என்ற மருத்துவமனை மீதி குண்டு வெடித்ததாக கூறப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்பில் 500 க்கும் மேற்பட்டோர் பலியானதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது
card 2
குண்டு வெடிப்பிற்கு யார் காரணம்?
இந்த குண்டுவெடிப்பிற்கு, ஹமாஸ் தான் காரணமென இஸ்ரேல் பிரதமர் குற்றம் சாட்டியுள்ளார்.
ஹமாஸ் கும்பல், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த முயற்சித்து, தவறுதலாக, தன்னுடைய மக்களின் மீதே ஏவுகணையை செலுத்தியுளார்கள் என அவர் குற்றம் சாட்டினார்.
மறுபுறம் ஹமாஸ் தரப்பில், இது இஸ்ரேல் திட்டமிட்டு நடத்திய தாக்குதலென கூறியுள்ளது.
இந்த குண்டுவெடிப்பிற்கு உலக தலைவர்கள் அனைவரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவமனை குண்டுவெடிப்பிற்கிடையே, இன்று இஸ்ரேல் செல்லும் அமெரிக்க அதிபர் பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் பேசினார்.
"காசாவில் உள்ள அல்-அஹ்லி அரபு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட பயங்கரமான உயிர் இழப்பு ஆகியவற்றால் நான் கோபமும், ஆழ்ந்த வருத்தமும் அடைந்துள்ளேன்" என்று பைடன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.