Page Loader
வீடியோ: யாருக்கும் தெரியாமல் புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இரகசிய சுரங்கப்பாதை தோண்டிய கூட்டம் 

வீடியோ: யாருக்கும் தெரியாமல் புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இரகசிய சுரங்கப்பாதை தோண்டிய கூட்டம் 

எழுதியவர் Sindhuja SM
Jan 10, 2024
06:41 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் வரலாற்று சிறப்புமிக்க புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு அடியில் இரகசியமாக சுரங்கப்பாதை தோண்டிய கூட்டத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். கிரவுன் ஹைட்ஸில் உள்ள சாபாத்-லுபாவிச் உலக தலைமையகத்தில் ஒரு தற்காலிக பாதை கண்டுபிடிக்கப்பட்டது சந்தேகத்தை ஏற்படுத்தியதை அடுத்து, அந்த கட்டிடம் முழுவதிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு அடியில் இரகசியமாக சுரங்கப்பாதை தோண்டுவது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து, அரசாங்க நிர்வாகத்திற்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக 10 நபர்களை கைது செய்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. தீவிர கொள்கை கொண்ட சில மாணவர்கள் இதை செய்ததாக தெரிவிக்கபட்டுள்ளது. அந்த சுரங்கப்பாதை எப்போது கட்டப்பட்டது என்பதும் எதற்காக கட்டப்பட்டது என்பதும் இன்னும் தெரியவில்லை. இந்நிலையில், அந்த சுரங்கப்பாதையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

புரூக்ளின் ஜெப ஆலயத்திற்கு கீழ் இருந்த இரகசிய சுரங்கப்பாதை