Page Loader
வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம்
ட்விட்டரில் ANI செய்தி நிறுவனம் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது.

வீடியோ: துபாயின் புர்ஜ் கலீஃபாவில் ஒளிர்ந்த பிரதமர் மோடியின் படம்

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2023
05:08 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடியின் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்(UAE) பயணத்தை முன்னிட்டு இந்திய தேசியக் கொடி மற்றும் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபாவில் ஒளிரவிடப்பட்டது. இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபிக்கு சென்றடைந்தார். இந்நிலையில், ட்விட்டரில் ANI செய்தி நிறுவனம் ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளது. உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபாவில் இந்திய தேசியக் கொடி மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படம் ஒளிர்வதை அந்த வீடியோ காட்டியது. "மாண்புமிகு பிரதமர் மோடியை வரவேற்கிறோம்" என்ற வாசகமும் புர்ஜ் கலீஃபாவில் எழுதப்பட்டிருந்தது. பிரதமர் மோடிக்கு துபாயில் அளிக்கப்பட்ட இந்த அமோக வரவேற்பின் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடிக்கு துபாயில் அளிக்கப்பட்ட அமோக வரவேற்பு