Page Loader
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி; தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்
ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு கோவிட்-19 தொற்று உறுதி; தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 18, 2024
08:18 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது தேர்தல் பிரச்சாரத்திற்காக புதன்கிழமை லாஸ் வேகாஸுக்குச் சென்றபோது, அவருக்கு கோவிட் -19 க்கு சோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும், தற்போது லேசான அறிகுறிகளே இருப்பதால், சுயமாக தனிமைப்படுத்தப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அவரது தேர்தல் உரை ரத்து செய்யப்படுவதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரீன் ஜீன்-பியர் அறிவித்தார். இதே நேரத்தில், அமெரிக்கா ஜனாதிபதி பைடன் இதனை தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி படுத்தினார்.

ட்விட்டர் அஞ்சல்

பைடனுக்கு கோவிட்-19 உறுதி

கருத்துக்கணிப்பு

அதிபர் தேர்தலில் இருந்து அவர் விலக வேண்டும் என கோரிக்கைகள்

அதிபர் ஜோ பைடன் ஓய்வு எடுப்பதற்காக லாஸ் வேகாஸிலிருந்து புறப்படும் போது செய்தியாளர்களிடம், "குட், நான் நன்றாக உணர்கிறேன்" என்று கூறினார் என இந்தியா டுடே தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஜோ பைடன் வயது சம்மந்தப்பட்ட அல்ஸிமர் நோயால் பாதிக்கப்பட்டிருக்க கூடும் என செய்திகள் உலா வந்த நேரத்தில், தற்போது அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே செவ்வாய்க்கிழமை முடிவடைந்த ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் கருத்துக்கணிப்பில், சுமார் 40 சதவீதம் பேர் பைடன் தனது மறுதேர்தல் முயற்சியை கைவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். மறுபுறம் பைடனும், தன்னுடைய இடத்தில் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக கமலா ஹாரிஸ் செயல்படலாம் எனத்தெரிவித்ததாகவும் NDTV செய்தி வெளியிட்டிருந்தது.