Loading...
பெற்றோர்கள் கவனத்திற்கு! குழந்தைகளுக்கும் விசா நேர்காணல் கட்டாயம் என அமெரிக்க தூதரகம் அறிவிப்பு
குழந்தைகளுக்கும் விசா நேர்காணல் கட்டாயம் என அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

பெற்றோர்கள் கவனத்திற்கு! குழந்தைகளுக்கும் விசா நேர்காணல் கட்டாயம் என அமெரிக்க தூதரகம் அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 18, 2026
09:01 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்க விசா பெற விண்ணப்பிக்கும் சிறார்கள், வயது வித்தியாசமின்றி விசா நேர்காணலின் போது தூதரகத்தில் நேரில் ஆஜராவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதிதாக பிறந்த குழந்தைகள், கைக்குழந்தைகள் முதல் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் வரை அனைவருக்கும் இந்த விதிமுறை பொருந்தும் என இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தெளிவுபடுத்தியுள்ளது. சிறு குழந்தைகளுக்கு நேர்காணலில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்ற தவறான புரிதலைப் போக்கும் வகையில், அமெரிக்க தூதரகம் தனது Visa Friday காணொளி மூலம் விளக்கமளித்துள்ளது. எல்லை பாதுகாப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இந்த நடைமுறையின் முக்கிய நோக்கமாகும். எனவே, பெற்றோர் அல்லது பாதுகாவலர்கள் மட்டுமே ஆஜராகி குழந்தைகளுக்கான விசாவைப் பெற முடியாது.

வழிகாட்டுதல்கள்

புகைப்படத்திற்கான கடுமையான வழிகாட்டுதல்கள்

சிறார்களின் விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்படும் புகைப்படம் அமெரிக்க வெளியுறவுத் துறையின் விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

புகைப்படம் 2x2 அங்குல அளவிலும், டிஜிட்டல் வடிவில் சமர்ப்பிக்கும் போது 600x600 முதல் 1200x1200 பிக்சல் அளவிலும், 240 KB-க்கு மிகாமலும் JPEG வடிவத்தில் இருக்க வேண்டும்.

புகைப்படத்தின் பின்புலம் வெள்ளையாக இருக்க வேண்டும்.

புகைப்படத்தில் குழந்தையின் முகம் தெளிவாக மையப்பகுதியில் அமைந்திருக்க வேண்டும். கண்கள் இரண்டும் திறந்த நிலையில், இயல்பான முகபாவனையுடன் இருக்க வேண்டும்;

இருப்பினும் கைக்குழந்தைகளுக்குச் சிறிய தளர்வுகள் அனுமதிக்கப்படும்.

புகைப்படங்கள் கடந்த 6 மாதங்களுக்குள் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.

மத ரீதியான காரணங்களைத் தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் தொப்பி அல்லது தலைப்பாகை அணியக் கூடாது.

ADVERTISEMENT