இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வத்தின் படம்: ட்விட்டர் சர்ச்சை
இங்கிலாந்து பீர் பாட்டிலில் இந்து தெய்வமான லட்சுமியின் படம் பொறிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. "இந்து தெய்வத்தின் புனித படத்தை பீர் பாட்டிலில் பயன்டுத்துவது இந்துக்களை அவமதிக்கும் மற்றும் புண்படுத்தும் செயல்." என்று பிரிட்டிஷ் இந்துக்கள் மற்றும் இந்தியர்களின் சமூக இயக்கம் ஒன்று இதை எதிர்த்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. மேலும், இந்த மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்யுமாறு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இதை ஆதரிக்கும் பலரும் இந்த பீர் பாட்டில் நிறுவனமான பியன் மேன்கருக்கு எதிராக பேசி வருகின்றனர். இதே போல், 2021ஆம் ஆண்டில், தென்மேற்கு பிரான்சில் உள்ள கிரெனேட்-சர்-கரோன் என்ற பிரெஞ்சு மதுபான ஆலை "சிவா பீர்" என்பதை வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால், அந்த மதுபான ஆலை பீர் தயாரிப்பதை நிறுத்தியது.