Page Loader
இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?!
இளவரசர் வில்லியம் தன்னை தாக்கியதாக இளவரசர் ஹாரி குற்றசாட்டு!

இங்கிலாந்து அரச குடும்ப சர்ச்சை: இளவரசர் ஹாரி தாக்கப்பட்டாரா?!

எழுதியவர் Sindhuja SM
Jan 06, 2023
02:07 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தன்னை தாக்கியதாக அவரது சகோதரர் இளவரசர் ஹாரி வெளியிட்டிருக்கும் தகவல்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளவரசர் ஹாரி, நடிகை மேகன் மார்கிளை மணந்ததில் இருந்து அரச குடும்பத்தால் மிகவும் ஒடுக்கப்பட்டதாக அண்மையில் குற்றம் சாட்டப்பட்டது. இதற்கிடையில், தற்போது தன் சகோதரரே தன்னை தாக்கியதாக இளவரசர் ஹாரி வெளிப்படையாக கூறி இருக்கிறார். இது அரச குடும்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இளவரசர் ஹாரி-நடிகை மேகன் மார்கிள் திருமணத்தை முதலில் இங்கிலாந்து அரச குடும்பம் ஏற்றுக்கொள்ளவில்லை. மேகன் மார்கிள், வெள்ளையர் இனத்தை சேர்ந்தவர் இல்லை என்பதும் இதற்கு ஒரு காரணமாக இருந்தது. பல தடைகளைத் தாண்டி இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

இளவரசர்கள்

ஹாரியை தாக்கிய இளவரசர் வில்லியம்!

ஆனால், திருமணத்திற்கு பின், மனரீதியாக தான் மிகவும் துன்புறுத்தபட்டதாக மேகன் ஒரு நேர்காணலில் பேசி இருந்தார். அதன் பின், ஹாரி-மேகன் இருவரும் அரச பதவிகளில் இருந்து விலகினர். இந்நிலையில், தற்போது 'ஸ்பேர்' என்னும் ஆவணப்படத்தை ஹாரி வெளியிட்டிருக்கிறார். இந்த ஆவணப்படத்தில் குறிப்பிட்டிருக்கும் சில சம்பவங்களை 'தி கார்டியன்' பத்திரிகை வெளியிட்டிருக்கிறது. அந்த செய்தியின் படி, ஹாரி கூறி இருப்பதாவது: மேகனைப் பற்றி இளவரசர் வில்லியம் தவறாக பேசினார். "முரட்டுத்தனமானவள்", அகங்காரமானவள்", "அழிவை ஏற்படுத்துபவள்" என்று மேகனைக் குறிப்பிட்டார். அதன் பின், என் சட்டை காலரை பிடித்து சுவற்றில் பலமாக தள்ளினார். நாய்க்கு உணவு வைத்திருந்த இடத்தில் போய் நான் விழுந்தேன். என் முதுகில் பலத்த காயம்பட்டது. என்று அவர் கூறி இருக்கிறார்.