பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதலில் இருவர் பலி
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் இன்று காலை,(ஏப்ரல் 19) வெள்ளிக்கிழமையன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வாகனம் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டதாக ஒளிபரப்பு ஜியோ நியூஸ் தெரிவித்துள்ளது.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி குறிப்பில், இந்த தாக்குதலில் வாகனத்தில் இருந்த 5 வெளிநாட்டவர்களும் உயிர் தப்பினர் என கூறப்பட்டுள்ளது.
எனினும், இந்த தாக்குதலுக்காக பாகிஸ்தான் காவல்துறை நடத்திய பதில் தாக்குதலில், தற்கொலை குண்டுதாரி மற்றும் இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறியது.
மேலும் மூவர் காயமடைந்ததாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
ட்விட்டர் அஞ்சல்
பாகிஸ்தானில் தாக்குதல்
Urgent Alert 🚨: A suicide attack near foreigners' vehicle in Landhi, #Karachi. 3 injured, 2 terrorists neutralized. Prayers for the injured. Stay safe, everyone #Pakistan pic.twitter.com/seHXy35YMo
— Roshan Din Diameri (@Rohshan_Din) April 19, 2024