NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்
    சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்.. இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்

    சுனாமி எச்சரிக்கையை நீக்கிய பிலிப்பைன்ஸ்; இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பும் மக்கள்

    எழுதியவர் Prasanna Venkatesh
    Dec 03, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    நேற்று (டிசம்பர் 2) இரவு 10.37 மணியளவில் பிலிப்பைன்ஸின் மிண்டானோவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டு, அதனைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் சூரிகாவ் டெல் சூர் உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    இந்நிலையில், தற்போது கடலோரப் பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிலிப்பைன்ஸின் எரிமலை மற்றும் நிலநடுக்கவியல் நிறுவமானது இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

    எனினும், இரவு ஏற்பட்ட பெரிய நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சிறிய அளவிலான 500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் இன்னும் ஏற்பட்ட வண்ணமே இருப்பதாக அப்பகுதிகளில் வாழும் மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    பிலிப்பைன்ஸ்

    நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்: 

    நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் உயிர்ச்சேதங்கள் பெரிய அளவில் இல்லை என்றே தெரிகிறது.

    ஆனால், அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் சிறிய அளவில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

    சுனாமி எச்சரிக்கை நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று காலை முதலே அப்பகுதி மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

    எனினும், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும், உடனடித் தகவல்களுக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.

    மேலும், மேற்கொண்டு நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டால், உடனடியாக மக்களை வெளியேற்றவும் தயாரான நிலையிலேயே அதிகாரிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிலிப்பைன்ஸ்
    நிலநடுக்கம்
    ஜப்பான்
    உலகம்

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    பிலிப்பைன்ஸ்

    பிலிப்பைன்ஸில் சுட்டு கொலை செய்யப்பட்ட இந்திய தம்பதி உலகம்
    இந்திய-சீக்கிய தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 3 பேர் பிலிப்பைன்ஸில் கைது இந்தியா
    பிலிப்பைன்ஸ் கப்பலில் தீ விபத்து: ஒரு குழந்தை உட்பட 31 பேர் பலி உலகம்
    பிபா உலகக்கோப்பை வரலாற்றில் முதல் வெற்றி; வரலாறு படைத்த பிலிப்பைன்ஸ் கால்பந்து

    நிலநடுக்கம்

    துருக்கி நிலநடுக்கத்தில் சிக்கிய கால்பந்து வீரர் கிறிஸ்டியன் அட்சு காணவில்லை! கால்பந்து
    துருக்கி: 90 மணி நேர போராட்டத்திற்கு பின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட நாய் துருக்கி
    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருந்த நியூஸிலாந்தில் நிலநடுக்கம் உலகம்

    ஜப்பான்

    மே 23ம் தேதி வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    ஆஸ்திரேலிய பயணத்தை ரத்து செய்தார் ஜோ பைடன்: குவாட்  உச்சி மாநாடு  ரத்து செய்யப்பட்டது ஆஸ்திரேலியா
    சர்வதேச அருங்காட்சியக தினம்: உலகம் முழுவதும் உள்ள சில வித்தியாசமான அருங்காட்சியகங்கள் உலகம்
    UPI சேவையில் இணையும் ஜப்பான்? இந்தியா

    உலகம்

    லியோ 25வது நாள்- போஸ்டர் வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் பெருமிதம் லியோ
    பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக பேசியதால் இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் பதவி நீக்கம்  பிரிட்டன்
    பாகிஸ்தானில் நீர்மூழ்கி போர் கப்பல்களை நிறுத்தி வைத்திருக்கும் சீனா இந்தியா
    அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை உயர்வு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025