டொனால்ட் டிரம்பை துப்பாக்கியால் சுட்டவர் யார் தெரியுமா?
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் இன்று நடைபெற்ற பேரணியின் போது டொனால்ட் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கியால் சுடப்பட்டது.
இந்த சம்பவத்தால் அவரது வலது காதை துப்பாக்கி குண்டு துளைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவரை சுட்டது யார் என்பது தெரியவந்துள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பை படுகொலை செய்ய முயன்ற நபர் 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பெத்தேல் பூங்காவில் வசித்து வந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ், டிரம்ப் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த மேடையில் இருந்து 130 கெஜம் தொலைவில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையின் கூரையில் நின்று கொண்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தி இருக்கிறார்.
அமெரிக்கா
குற்றவாளியின் உடல் மீட்பு; துப்பாக்கி பறிமுதல்
இதனையடுத்து, தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை உடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர்.
உயிரிழந்த தாமஸ் மேத்யூ க்ரூக்ஸிடம் இருந்து AR பாணி துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.
கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் துறைக்கான ஆட்டோமேஷன் கருவிகளை தயாரிக்கும் ஏஜிஆர் இன்டர்நேஷனல் இன்க். என்ற நிறுவனத்தின் கட்டிடத்தில் இருந்து அவரது உடல் மீட்கப்பட்டது.
அவர் ஏன் டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தினார் என்பது குறித்த விவரங்கள் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணையை முன்னெடுத்து வரும் மத்திய புலனாய்வுப் பிரிவும்(FBI), 20 வயதான தாமஸ் மேத்யூ க்ரூக்ஸை குற்றவாளி என அறிவித்துள்ளது.