Page Loader
நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப்
அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறையில் கேமராக்களை இருக்கக்கூடாது என்று கூறி வாதிட்டு வருகின்றனர்.

நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப்

எழுதியவர் Sindhuja SM
Apr 04, 2023
10:02 am

செய்தி முன்னோட்டம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் திங்களன்று(ஏப் 3) நியூயார்க் நகருக்கு தனது தனிப்பட்ட விமானத்தில் சென்றார். ஆபாச நடிகைக்கு பணம் செலுத்திய விவகாரத்தில் எழுந்த குற்றச்சாட்டை எதிர்கொள்ள அவர் நீதிமன்றத்தில் இன்று(ஏப் 4) சரணடைய இருக்கும் நிலையில், நீதிமன்ற விசாரணை நடக்கும் நியூயார்க் நகருக்கு அவர் சென்றிருக்கிறார். இதற்கிடையில், அவரது வழக்கறிஞர்கள் நீதிமன்ற அறையில் கேமராக்கள் இருக்கக்கூடாது என்று கூறி வாதிட்டு வருகின்றனர். டொனால்டு டிரம்ப் சரணடைய இருப்பதால் நியூயார்க் நகரத்தின் மன்ஹாட்டனில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ட்ரம்ப் செவ்வாயன்று மன்ஹாட்டன் மாவட்ட அட்டர்னி அலுவலகத்தில் சரணடைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், அவர் நீதிபதியின் முன் ஆஜராவதற்கு முன் அவரது கைரேகை ஆவணப்படுத்தப்படும்.

அமெரிக்கா

நீதிமன்றத்தில் கேமராக்கள் இருக்கக்கூடாது: டிரம்ப்பின் வழக்கறிஞர்கள்

76 வயதான குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப், 2024ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட இருக்கும் நிலையில் , அவருக்கு எதிரான வழக்கு ஒன்று சூடு பிடித்திருக்கிறது. குற்றவியல் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற பெயரையும் டொனால்டு டிரம்ப் பெற்றுள்ளார். டிரம்ப் தனது சட்டக் குழுவை மேம்படுத்தும் விதமாக குற்றவியல் பாதுகாப்பு வழக்கறிஞரும் முன்னாள் மத்திய அரசு வழக்கறிஞருமான டோட் பிளாஞ்சை தனது வழக்கறிஞர் குழுவில் சேர்த்துள்ளார். பிளாஞ்சை மற்றும் டிரம்ப்பின் பிற வழக்கறிஞர்கள் திங்களன்று வீடியோ எடுத்தல், புகைப்படம் எடுத்தல் மற்றும் ரேடியோ கவரேஜ் ஆகியவற்றை அனுமதிக்க வேண்டாம் என்று நீதிமன்றத்தில் வலியுறுத்தினர். நீதிபதி ஜுவான் மெர்சன் இந்த விஷயத்தில் முடிவெடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.