டொனால்டு டிரம்ப் கைது செய்யப்படுவாரா: அடுத்து என்ன நடக்கும்
2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்தற்காக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை நியூயார்க் கிராண்ட் ஜூரி குற்றவாளியாக அறிவித்துள்ளது. இதனால், கிரிமினல் குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் என்ற பெயரை டிரம்ப் பெற்றுள்ளார். டொனால்டு டிரம்பின் வழக்கறிஞர், டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டால், அவரது குழு "சாதாரண நடைமுறைகளைப் பின்பற்றும்" என்று முன்பு கூறியிருந்தார். முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் சரணடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவாக, நியூயார்க்கில் ஒரு குற்றவியல் கைதியை கைது செய்ததும் அவரது கைரேகைகள் மற்றும் புகைப்படங்கள் ஆவணப்படுத்தப்படும். அனைத்து நடைமுறைகளும் முடிவடையும் வரை குற்றவாளிகள் பொதுவாக பல மணிநேரம் காவலில் வைக்கப்படுவார்கள்.
சட்டத்தின்படி, இது குறைந்த அளவிலான குற்றம்: வழக்கறிஞர்கள்
இது மிக பெரும் வழக்கு என்பதால் இதற்கு எதிராக வன்முறை போராட்டங்கள் நடக்க வாய்ப்பிருக்கிறது. அதை கருத்தில் கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க, இரகசிய சேவை மற்றும் நியூயார்க் காவல் துறை ஆகியவை எச்சரிக்கையுடன் இருக்கும். இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகளை கை விலங்குகளோடு நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல மாட்டார்கள் என்று வழக்கறிஞர்கள் நம்புகின்றனர். நியூயார்க் மாநில சட்டத்தின்படி, பிரச்சாரம்-நிதி மீறல் போன்றவை "குறைந்த அளவிலான குற்றமாகும்". இதற்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சட்டத்தின் படி, குற்றம்சாட்டப்பவர், அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடவும் அதிபராக பணியாற்றவும் அனுமதி உண்டு,