Page Loader
முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்?
பாலியல் உறவை மறைக்க ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் வழக்கு

முதல்முறையாக ஒரு அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு: கைதாகிறாரா டொனால்ட் டிரம்ப்?

எழுதியவர் Sayee Priyadarshini
Mar 31, 2023
09:12 am

செய்தி முன்னோட்டம்

வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப்பின் மீது வழக்கு பதிவு செய்யபப்ட்டுள்ளது. டொனால்ட் ட்ரம்ப் ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸ் என்பவருடன் நெருக்கமாக இருந்தார். கடந்த 2016 ஆம் ஆண்டு, அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்த விவரம் மிகப்பெரிய பிரச்சனையாக மாறியது. இதை மறைத்து, தங்கள் உறவு பற்றிய தகவல் வெளிவராமல் இருப்பதற்கு, அந்த நடிகைக்கு டொனால்ட் ட்ரம்ப் $130,000 கொடுத்ததாக அவர் மீது வழக்கு பதியப்பட்டது. டொனால்ட் டிரம்ப்பிற்கு எதிராக சாட்சியும், ஆதாரமும் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ட்ரம்ப் தானாகவே முன்வந்து சரணடைய வாய்ப்புள்ளது. மேலும், விசாரணை செவ்வாய் அன்று தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

முதல் முறையாக அமெரிக்க ஜனாதிபதி மீது கிரிமினல் வழக்கு