ஸ்டோர்மி டேனியல்ஸின் அவதூறு வழக்கில் டிரம்ப் சட்ட நிவாரணம் பெற்றார்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான அவதூறு வழக்கில் தோல்வியடைந்ததால், ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் சட்டக் கட்டணமாக 121,000 டாலர்களை டிரம்புக்கு வழங்கியுள்ளார். இந்த வழக்கில் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் டேனியல்ஸ் ஏற்கனவே 500,000 டாலர்களை செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் தலைவருமான டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்தியதாக அவர் மீது குற்றமசாட்டப்பட்டுள்ளது. ஸ்டோர்மி டேனியல்ஸுடன் டிரம்ப் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார் என்றும் அதை பற்றி வெளியே சொல்லாமல் இருக்க டேனியல்ஸுக்கு அவர் $130,000 கொடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்கும் டேனியல்ஸ்
டிரம்புடனான தனது தொடர்பைப் பற்றி வெளியே பேச கூடாது என்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை மிரட்டியதாக 2018ஆம் ஆண்டு ஸ்டோர்மி டேனியல்ஸ் குற்றம்சாட்டினார். அதை மறுத்த டிரம்ப், டேனியல்ஸ் கூறுவதெல்லாம் பொய் மற்றும் நாடகம் என்று ட்விட்டரில் கூறி இருந்தார். இதனையடுத்து, டேனியல்ஸ், டிரம்புக்கு எதிராக ஒரு வழக்கை 2018ஆம் ஆண்டு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பே தற்போது வந்திருக்கிறது. டிரம்பின் வழக்கறிஞர் ஹர்மீத் தில்லான், கலிபோர்னியாவில் உள்ள 9வது அமெரிக்க சர்க்யூட் மேல்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகலை ட்விட்டரில் வெளியிட்டார். டேனியல்ஸால் போடப்பட்ட வழக்கும் நியூயார்க்கில் டிரம்புக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளும் ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாதது. ஆனால், இரண்டு வழக்கிலும் டேனியல்ஸ் சம்பந்தப்பட்டிருக்கிறார்.