
அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலம் இது: பைடன் அரசாங்கத்தின் மீது டிரம்ப் பாய்ச்சல்
செய்தி முன்னோட்டம்
2016ஆம் ஆண்டு, தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஒரு ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டப்பட்டுள்ள நிலையில், பைடன் அரசாங்கத்தை அவர் தாக்கி பேசி இருக்கிறார்.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரும் குடியரசுக் கட்சியின் தலைவருமான டொனால்டு டிரம்ப், ஆபாச நடிகையான ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் செலுத்திய வழக்கில் செவ்வாய்க்கிழமை அன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அதனையடுத்து, புளோரிடாவில் உள்ள தனது மார்-ஏ-லாகோ இல்லத்தில் ஆதரவாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர் பைடன் அரசாங்கத்தை சாடியுளளார்.
குடியரசுக் கட்சியினரை குறிவைத்து, அரசு நிறுவனங்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு ஆளும் ஜனநாயகக் கட்சி சதி செய்வதாக அவர் குற்றம் சாட்டியனார்.
அமெரிக்கா
நம் நாடு நரகமாகி கொண்டிருக்கிறது: டிரம்ப்
இந்த வழக்கில் 34 குற்றச் செயல்களில் டிரம்ப் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இவை அனைத்தையும் அவர் மறுத்துள்ளார்.
ட்ரம்பை குற்றவாளியாக்க ஜனநாயகக் கட்சியினர் செய்யும் சதி இது என்று குடியரசுக் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் 2024ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து நீக்கப்படுவார்.
இந்நிலையில், தன் ஆதரவாளர்களிடம் பேசிய டிரம்ப், "அமெரிக்காவில் இப்படியெல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் செய்த ஒரே குற்றம், நம் தேசத்தை அழிக்க நினைப்பவர்களிடமிருந்து அச்சமின்றி அதை பாதுகாத்ததுதான். அமெரிக்க வரலாற்றின் இருண்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம் நாடு நரகமாகி கொண்டிருக்கிறது." என்று கூறி இருக்கிறார்.