LOADING...
"உலகிலேயே மிகச்சிறந்த எண்ணெய் எங்களிடம் உள்ளது"; அமெரிக்கக் கரையை நோக்கி பிரம்மாண்ட கப்பல்கள் வருவதாக டிரம்ப் தடாலடி அறிவிப்பு
அமெரிக்கக் கரையை நோக்கி பிரம்மாண்ட கப்பல்கள் வருவதாக டிரம்ப் தடாலடி அறிவிப்பு

"உலகிலேயே மிகச்சிறந்த எண்ணெய் எங்களிடம் உள்ளது"; அமெரிக்கக் கரையை நோக்கி பிரம்மாண்ட கப்பல்கள் வருவதாக டிரம்ப் தடாலடி அறிவிப்பு

எழுதியவர் Sekar Chinnappan
Apr 11, 2026
07:20 pm

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் பிரதிநிதிகள் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை பல்வேறு நிபந்தனைகளால் முட்டுக்கட்டையை சந்தித்து வரும் நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் ஒரு அதிரடிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "உலகின் மிகப்பெரிய எண்ணெய் பொருளாதார நாடுகளான ரஷ்யா மற்றும் சவுதி அரேபியா ஆகிய இரண்டையும் சேர்த்தால் எவ்வளவு எண்ணெய் இருக்குமோ, அதைவிட அதிக எண்ணெய் அமெரிக்காவிடம் உள்ளது. உலகிலேயே மிகச்சிறந்த மற்றும் 'இனிமையான' (Sweetest) எண்ணெய் மற்றும் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு செல்ல உலகின் மிகப்பெரிய காலி கப்பல்கள் அமெரிக்கக் கரையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றன." என்று அவர் பதிவிட்டுள்ளார்.

ஈரானின் நிபந்தனைகள்

பேச்சுவார்த்தையில் நீடிக்கும் இழுபறி

இஸ்லாமாபாத்தில் திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தை சுமார் 5 மணி நேரம் தாமதமாகவே தொடங்கியது. ஜெர்மனி வெளியுறவு அமைச்சரிடம் பேசிய ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி, "நாங்கள் அமெரிக்காவைத் துளியும் நம்பவில்லை" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும், கத்தாரில் முடக்கப்பட்டிருக்கும் ஈரானியச் சொத்துக்களை விடுவிக்க வேண்டும் மற்றும் போர் இழப்பீடு வழங்க வேண்டும் போன்ற பல கடினமான நிபந்தனைகளை ஈரான் முன்வைத்துள்ளது. பேச்சுவார்த்தைக்கான விதிமுறைகளை முடிவு செய்ய ஈரான் குழுவினர் ஹெஸ்புல்லா அமைப்பினருடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா

அமெரிக்காவின் கறாரான நிலைப்பாடு

ஈரான் தனது முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்கக் கோரினாலும், தனது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என்று வெள்ளை மாளிகை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஈரானின் நிபந்தனைகளுக்குப் பணியப் போவதில்லை என்பதில் டிரம்ப் நிர்வாகம் உறுதியாக உள்ளது. "விரைவான தீர்வு காண நாங்கள் காத்திருக்கிறோம்" என்று டிரம்ப் ஒருபுறம் கூறினாலும், தனது நாட்டின் எரிசக்தி வலிமையைக் காட்டி ஈரானுக்குப் பொருளாதார ரீதியான அழுத்தத்தை அவர் கொடுத்து வருகிறார்.

Advertisement

தாக்கம்

உலகப் பொருளாதாரத்தில் தாக்கம்

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடைபெறும் எண்ணெய் போக்குவரத்து முடங்கியுள்ளதால் உலக நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன. இந்நிலையில், அமெரிக்காவே அதிக அளவில் எண்ணெயை ஏற்றுமதி செய்யத் தயாராக இருப்பதாக டிரம்ப் கூறியிருப்பது, சர்வதேசச் சந்தையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், அமெரிக்கா தனது சொந்த எண்ணெய் வளத்தைக் கொண்டு சர்வதேச எரிசக்தித் தேவையைப் பூர்த்தி செய்ய முயலும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement