அடுத்த செய்திக் கட்டுரை

துபாயை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் டைம்லேப்ஸ் வீடியோ வைரல்
எழுதியவர்
Sindhuja SM
Apr 19, 2024
06:28 pm
செய்தி முன்னோட்டம்
கடுமையான இடியுடன் கூடிய மழை நகரம் முழுவதும் பெய்ததால், துபாய் சமீபத்தில் இதற்கு முன்னெப்போதும் இல்லாத வானிலை நிகழ்வை சந்தித்தது. இதனால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் தெருக்களில் வெள்ளம் சூழ்ந்தது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
அரசு நடத்தும் வானிலை நிறுவனம் இது ஒரு "வரலாற்று வானிலை நிகழ்வு" என்றும் துபாய் 75 ஆண்டுகளில் இதுபோன்ற மழையைப் பார்த்ததில்லை என்றும் கூறியது.
அப்போது மழையால் பாதிக்கப்பட்ட துபாய் நகரத்தின் பல வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
இந்நிலையில், துபாயை புரட்டிப்போட்ட புயல் மற்றும் வெள்ளத்தின் டைம்லேப்ஸ் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
புயல் மற்றும் வெள்ளத்தின் டைம்லேப்ஸ் வீடியோ வைரல்
Dubai: Timelapse of the massive storm that caused a historic flood. pic.twitter.com/tackWMYJzO
— Pagan 🚩 (@paganhindu) April 17, 2024