சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம்; இந்தியாவில் பல சிங்கப்பூர்கள்; பிரதமர் மோடியின் பயண ஹைலைட்ஸ்
இந்தியாவும் சிங்கப்பூரும் வியாழன் (செப்டம்பர் 5) அன்று செமிகண்டக்டர் சுற்றுச்சூழல் கூட்டாண்மை மற்றும் டிஜிட்டல் பொருளாதாரங்களுக்கு இடையே அதிக இயங்குநிலைக்கான ஒப்பந்தங்களை வெளியிட்டன. சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடனான சந்திப்பில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பிராந்திய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்காக இரு நாடுகளும் தொடர்ந்து இணைந்து செயல்படும் என்றார். இந்தியப் பிரதமரின் முதல் இருதரப்புப் பயணமான புருனேவுக்குப் பிறகு, தனது தென்கிழக்கு ஆசியப் பயணத்தின் இரண்டாவது கட்டமாக மோடி புதன்கிழமை சிங்கப்பூர் வந்தடைந்தார். "சிங்கப்பூர் ஒரு நட்பு நாடு மட்டுமல்ல. ஒவ்வொரு வளரும் நாட்டிற்கும் சிங்கப்பூர் ஒரு உத்வேகம். இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க விரும்புகிறோம்." என்று மோடி பேசினார்.
இருதரப்பு ஒப்பந்தங்கள்
இரு பிரதமர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இந்தியாவும் சிங்கப்பூரும் செமிகண்டக்டர்கள், டிஜிட்டல் ஒத்துழைப்பு, சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் நான்கு ஒப்பந்தங்களை அறிவித்தன. சிங்கப்பூரில் வசிக்கும் 3,50,000 இந்திய வம்சாவளியினர் இருதரப்பு உறவுகளின் வலுவான அடித்தளமாக செயல்படுகிறார்கள். மேலும், சுபாஷ் சந்திரபோஸ், ஆசாத் ஹிந்த் ஃபவுஜ் மற்றும் லிட்டில் இந்தியாவுக்குக் கிடைத்த இடம் மற்றும் மரியாதைக்காக இந்தியா முழு சிங்கப்பூருக்கும் என்றென்றும் நன்றியுடன் உள்ளது என மோடி கூறினார். இந்தியாவின் முதல் திருவள்ளுவர் கலாச்சார மையம் சிங்கப்பூரில் விரைவில் திறக்கப்படும் என அறிவித்தார். மிகப் பழமையான மொழியான தமிழில் உலகிற்கு வழிகாட்டும் சிந்தனைகளை வழங்கிய மகான் திருவள்ளுவர் என்று அவர் மேலும் கூறினார்.