NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்
    நிலநடுக்கத்தால் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

    சக்திவாய்ந்த நிலநடுக்கம்; மியான்மர் மற்றும் தாய்லாந்தில் அவசரநிலை பிரகடனம்

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 28, 2025
    04:44 pm

    செய்தி முன்னோட்டம்

    மியான்மரைத் தாக்கி தாய்லாந்து தலைநகரில் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்திய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து தாய்லாந்தின் பாங்காக்கில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

    அதிகாரிகள் அவசர சேவைகள், மருத்துவமனைகள் மற்றும் போக்குவரத்து அமைப்புகளை திரட்டியுள்ள நிலையில், உயரமான கட்டிடங்களைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தி பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

    பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு தழுவிய எச்சரிக்கைகள் எஸ்எம்எஸ் மற்றும் ஊடக சேனல்கள் மூலம் வெளியிடப்பட்டன.

    முன்னதாக, 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வெள்ளிக்கிழமை (மார்ச் 28) மியான்மரின் சாகைங் பகுதியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது.

    இதையடுத்து, மியான்மர் அதன் தலைநகர் நேபிடாவ் மற்றும் மண்டலே உட்பட ஆறு பிராந்தியங்களில் அவசரநிலையை அறிவித்தது.

    தாய்லாந்து

    தாய்லாந்தில் உயிரிழப்பு

    தாய்லாந்தில், பாங்காக்கில் நிலநடுக்கத்தால் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் இறந்துள்ளனர், மேலும் பலர் இன்னும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர்.

    கட்டுமானத்தில் உள்ள ஒரு உயரமான கட்டிடத்தின் இடிபாடுகளில் இருந்து ஏழு பேரை மீட்புக் குழுக்கள் காப்பாற்றியுள்ளனர்.

    கட்டிடம் இடிந்து விழுந்த தருணத்தை ஆன்லைனில் பரவி வரும் வியத்தகு வீடியோக்கள் காட்டுகின்றன, இதனால் ஒரு பெரிய தூசி மேகம் காற்றில் பரவியது.

    இதற்கிடையே, இந்த நிலநடுக்கத்தால் பல நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், 20 பேர் பலியாகி இருப்பதோடு, 90 பேர் காணவில்லை என்றும் அங்கிருந்து வரும் சில ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

    ட்விட்டர் அஞ்சல்

    வீடியோ

    Earthquake sum up 3pm (Mynamar/Thailand)
    - 7.7 quake hit near Mandalay/Myanmar
    - Hundreds of homes collapsed (various Myanmar cities)
    - Strong shocks in Thailand + multiple building collapse in Bangkok
    - USGS predicts thousands of people dead

    (Bangkok clips from social media:) pic.twitter.com/kJodTn6BIg

    — Florian Witulski (@vaitor) March 28, 2025
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நிலநடுக்கம்
    தாய்லாந்து
    மியான்மர்
    உலகம்

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    நிலநடுக்கம்

    இலங்கையில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இலங்கை
    ஆப்கானிஸ்தான் எல்லை அருகே பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பாகிஸ்தான்
    பாகிஸ்தான், பப்புவா நியூ கினி, ஜிசாங் நாடுகளில் நிலநடுக்கம் அமெரிக்கா
    வங்கதேசத்தில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்: கொல்கத்தாவில் நில அதிர்வு  பங்களாதேஷ்

    தாய்லாந்து

    சர்வதேச சிலம்பு போட்டிக்கு தாய்லாந்து செல்ல அரசு உதவி கோரும் பள்ளி மாணவர்கள்  தமிழக அரசு
    அரசியலை விட்டு விலகிய பிரதமர்: என்ன நடக்கிறது தாய்லாந்தில்? உலகம்
    ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலம் வென்ற தமிழ்நாடு வீரர் தமிழ்நாடு
    தாய்லாந்தில் இன்று தொடங்குகிறது கங்குவா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தமிழ் திரைப்படம்

    மியான்மர்

    2 நாட்களில் மணிப்பூருக்குள் நுழைந்த 718 மியான்மர் நாட்டவர்கள்  மணிப்பூர்
    மணிப்பூர்: சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பயோமெட்ரிக் அறிமுகம் மணிப்பூர்
    மியான்மார்: ஆங் சான் சூகிக்கு மன்னிப்பு வழங்க இராணுவ அரசாங்கம் முடிவு  உலகம்
    மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒரு போலீஸ்காரர் பலி: 3 பேர் காயம்  இந்தியா

    உலகம்

    15ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சி ஓவியமாக வரைந்த மர்ம சுரங்கப் பாதைகள் கண்டுபிடிப்பு உலக செய்திகள்
    ரஷ்யாவின் அமைதிக்கான உறுதிப்பாட்டை சோதிக்க உக்ரைனில் ஒரு மாத போர் நிறுத்தத்தை முன்மொழிந்தது பிரான்ஸ் பிரான்ஸ்
    மகளிர் தினம் 2025 ஸ்பெஷல்: உலகின் சிறந்த டாப் 5 பெண் அரசியல் தலைவர்கள் சர்வதேச மகளிர் தினம்
    உலகளாவிய CO2 உமிழ்வில் 50% 36 நிறுவனங்களிலிருந்து மட்டுமே வருகிறது உலக செய்திகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025