வட அட்லாண்டிக் கடலில் காணாமல் போன நீர்மூழ்கியைத் தேடும் பணிகள் தீவிரம்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவில் 1912-ல் வடஅட்லாண்டிக் பெருங்கடலில் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் சிதைவுகளைக் காண ஆழ்கடல் சுற்றுலா சென்ற அமெரிக்காவின் ஓஷன்கேட் நிறுவனத்தின் டைட்டன் என்ற நீர்மூழ்கி காணாமல் போயிருக்கும் சம்பவம் அந்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்க நேரப்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை டைட்டானிக் மூழ்கிய இடத்தில் கடலுக்குள் சென்றிருக்கிறது டைட்டன் நீர்மூழ்கி. ஆனால், கடலில் மூழ்கிய 1.45 மணி நேரத்தில் அந்த நீர்மூழ்கிக்கும் கடற்பரப்பின் மேல் இருந்த போலார் பிரன்ஸ் கப்பலுக்குமான தொடர்பு அறுந்திருக்கிறது.
ஐந்து நபர்களுடன் கடலில் மூழ்கிய நீர்மூழ்கி காணாமல் போனதையடுத்து நான்கு நாட்களுக்குப் பிறகும் அதனைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இந்த தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள்.
அமெரிக்கா
விரைவில் குறையும் ஆக்ஸிஜன்:
கடலில் காணாமல் போன போலார் பிரின்ஸ் நீர்மூழ்கியில் அவசர காலத்தில் பயன்படுத்துவம் வகையில் 96 மணி நேரத்திற்குண்டான ஆக்ஸிஜன் இருப்பு இருந்திருக்கிறது.
எனினும், தற்போது நீர்மூழ்கி காணாமல் சென்று 86 மணி நேரம் ஆகும் நிலையில், இன்னும் 10 மணி நேரத்திற்கான ஆக்ஸிஜன் இருப்பு மட்டுமே இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. எனவே, நீர்மூழ்கியைத் தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
காணாமல் போன நீர்மூழ்கியில் பிரிட்டனைச் சேர்ந்த கோடீஸ்வரர் ஹமிஷ் ஹார்டிங், பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபர் ஷாஸாதா தாவூத் மற்றும் அவரது மகன் ஆகியோர் இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடா நாட்டு நிலப்பரப்பில் இருந்து 350 மைல்கள் தொலைவில், 2.5 கிமீ ஆழத்தில் டைட்டானிக் கப்பல் மூழ்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.