அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து; பிலடெல்பியாவில் வீடுகள் மீது விழுந்த விமானம்
செய்தி முன்னோட்டம்
ஒரு குழந்தை உட்பட ஆறு பேரை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய ஏர் ஆம்புலன்ஸ் விமானம் அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் விபத்துக்குள்ளானது.
விபத்தின் போது விமானம் வெடித்ததில் அங்கிருந்த பல வீடுகள் தீக்கு இரையானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்தில், உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் பற்றி அறிக்கை விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு அறிக்கையில், ஏர் ஆம்புலன்ஸ் நிறுவனமான ஜெட் ரெஸ்க்யூ ஏர் ஆம்புலன்ஸ், நான்கு பணியாளர்கள், ஒரு குழந்தை மருத்துவ நோயாளி மற்றும் நோயாளியின் அட்டெண்டர் உடன் விமானம் விபத்துக்குள்ளானது என்று செய்தி நிறுவனம் ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.
ஃபெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) படி, வெள்ளிக்கிழமை மாலை ரூஸ்வெல்ட் மால் அருகே விபத்து ஏற்பட்டது.
விபத்து
இரு தினங்களுக்கு முன்னர் நடந்த மற்றொரு விமான விபத்து
முன்னதாக இரு தினங்களுக்கு முன்னர் வாஷிங்டன் விமான நிலையம் அருகே பயணிகள் விமானம் மற்றும் அமெரிக்க ராணுவ பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் மோதியதில் 67 பேர் கொல்லப்பட்டனர்.
ஒரு அறிக்கையில், லியர்ஜெட் 55 விமானம் "வடகிழக்கு பிலடெல்பியா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட பிறகு" விபத்துக்குள்ளானதாக FAA கூறியது. மிசோரியில் உள்ள ஸ்பிரிங்ஃபீல்ட்-பிரான்சன் தேசிய விமான நிலையத்திற்கு விமானம் சென்று கொண்டிருந்தது.
தற்போதைய விபத்தை உறுதிப்படுத்திய போக்குவரத்து செயலாளர் சீன் டஃபி, "விமானத்தில் 6 பேர் இருந்ததாக கூறப்படுகிறது" என்றும், இந்த சம்பவம் FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் (NTSB) இணைந்து விசாரிக்கும் என்றும் கூறினார்.