ஜெஃப்ரி எப்ஸ்டீன் கோப்புகளின் இரண்டாவது தொகுப்பு வெளியீடு
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், முன்னாள் அமெரிக்க செனட்டர் ஜார்ஜ் மிட்செல் மற்றும் முன்னாள் அமெரிக்க தூதரும் நியூ மெக்சிகோ கவர்னருமான பில் ரிச்சர்ட்சன் உட்பட, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான 19 புதிய ஆவணங்களில் பல பணக்காரர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று எக்ஸ்ட்டீன் மனைவி கிஸ்லைன் மேக்ஸ்வெல் தொடர்புடைய கோப்புகள் வெளியிடப்பட்ட நிலையில், அதில் முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ மற்றும் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்று சர்ச்சையை கிளப்பியது. பெயரிடப்பட்டவர்களில் பலர் எந்த தவறும் செய்ததாகக் குற்றம் சாட்டப்படவில்லை என்றாலும், அவர்கள் எப்ஸ்டீனுடனான தொடர்பால் சர்ச்சைகளால் சூழப்பட்டுள்ளனர்.
டிரம்ப் தவறான நடத்தைக்கு ஆளாகவில்லை
எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட வர்ஜீனியா கியூஃப்ரே முன்னர், பில் ரீச்சார்ச்சனுடன் தான் உடலுறவு கொள்ள நிர்பந்திக்கப்பட்டதாக கூறியிருந்தார். தற்போது வெளியாகி உள்ள கோப்புகளில், கியூஃப்ரே தனக்கு மசாஜ் செய்யும்படி உத்தரவிடப்பட்டதாகக் கூறும் ஒரு பதிவு உட்பட, சில இடங்களில் ரிச்சர்ட்சன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எப்ஸ்டீனுடன் உடன் தொடர்பில் இருந்த முன்னாள் அதிபர் டிரம்ப், தவறான நடத்தைக்கு ஆளாகவில்லை என்று அந்த கோப்புகள் சுருக்கமாக குறிப்பிடுகின்றன. ஆனால், அவருடைய நட்பை பல காலத்திற்கு முன்பே துண்டித்து விட்டதாகவும், 15 ஆண்டுகளாக அவருடன் வழக்கத்தில் இல்லை எனவும் ட்ரம்ப் முன்னர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் பெயரும் இதில் ஒரே ஒரு முறை குறிப்பிடப்பட்டுள்ளது.
யார் இந்த ஜெஃப்ரி எப்ஸ்டீன்?
பிரபலங்கள், அரசியல்வாதிகள், கோடீஸ்வரர்கள் மற்றும் கல்வி நட்சத்திரங்களுடன் பழகுவதற்குப் அறியப்பட்ட கோடீஸ்வரர் எப்ஸ்டீன். 2005 ஆம் ஆண்டு புளோரிடாவில் உள்ள பாம் பீச்சில் 14 வயது சிறுமிக்கு பாலுறவுக்காக பணம் கொடுத்ததாக எழுந்த புகாரை தொடர்ந்து, காவல்துறை விசாரணைக்கு உட்பட்டார். பின்னர் 2006ல் கைது செய்யப்பட்டார். இவர் மேல் பல சிறுமிகள் குற்றம் சாட்டியிருந்தாலும், ஒரே ஒரு குற்றம் நிரூபிக்கப்பட்டு 13 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. மியாமி ஹெரால்ட் நாளிதழின் புலனாய்வுக்குப் பின்னர், இவரது பழைய வழக்குகள் உயிர் பெற்றது. அதனைத் தொடர்ந்து, 2019 ஆம் ஆண்டு இவர் மீண்டும் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும் போதே, சிறையில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.