Loading...
மெக்கா பள்ளிவாசல் புனிதம் மீறல்: 2 வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
மெக்காவில் 2 வங்கதேசத்தவருக்குச் சவுதி மரண தண்டனை நிறைவேற்றியதற்கு வங்கதேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மெக்கா பள்ளிவாசல் புனிதம் மீறல்: 2 வங்கதேசத்தினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

எழுதியவர் Vasuki
Oct 18, 2026
06:50 pm

செய்தி முன்னோட்டம்

மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசலில் முறைகேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, வங்கதேசத்தை சேர்ந்த இருவருக்கு சவுதி அரேபியா மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது. இந்தத் தண்டனை குறித்து வங்கதேச அரசுக்கு எந்தவித முன் தகவலும் தெரிவிக்காமல் ரகசியமாக நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்து, அந்நாட்டு அரசு சவுதி அரேபியாவுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. மேலும், இது தொடர்பாக விளக்கம் கேட்டு டாக்காவில் உள்ள சவுதி அரேபியத் தூதரை நேரில் வரவழைத்து வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சகம் தூதரக ரீதியான ஆட்சேபனையைத் தெரிவித்ததுடன், சர்வதேச நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மக்கள் மத்தியில் அதிருப்தி

இரு நாடுகளுக்கு இடையே தூதரக பதற்றம்

குற்றச்சாட்டுகள் குறித்த விவரங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்படாத நிலையில், இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட செய்தி வங்கதேச மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதி அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக அந்நாட்டு மக்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

முன் அறிவிப்பின்றி வெளிநாட்டு குடிமக்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட இந்த விவகாரம், தற்போது சவுதி அரேபியா மற்றும் வங்கதேசம் ஆகிய இரு நாடுகளுக்கு இடையேயான தூதரக உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT