Page Loader
வைரல் வீடியோ: சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டம்
இந்த கட்டிடம் விமான நிலையத்திலிருந்து 20 நிமிட பயணத்தில் இருக்கும்.

வைரல் வீடியோ: சவுதி அரேபியாவின் புதிய மெகா திட்டம்

எழுதியவர் Sindhuja SM
Feb 20, 2023
04:59 pm

செய்தி முன்னோட்டம்

சவூதி அரேபிய அரசாங்கம் நாட்டின் தலைநகர் ரியாத்தில் முராப்பா என்ற பெயரில் ஒரு பெரிய புதிய முன்மொழியப்பட்ட கட்டமைப்பிற்கான திட்டங்களை அறிவித்துள்ளது என்று அரபு செய்திகள் தெரிவித்துள்ளது. இந்த பிரமாண்டமான கட்டிடம் ரியாத் நகரத்தின் அழகிற்கு இன்னும் மெருகூட்டும் அழகை சேர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. முகாப் என்று அழைக்கப்படும் இந்த கட்டிடம் நியூ முராப்பா என்ற புதிய நகரத்தின் மைய பகுதியாக இருக்கும். இந்த பிரமாண்டமான நகரத்தின் விளம்பர வீடியோவை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது நியூயார்க்கில் உள்ள எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் அளவை விட 20 மடங்கு பெரிதாக இருக்கும். இந்த திட்டத்தில் அருங்காட்சியகம், தொழில்நுட்பம்-வடிவமைப்பு பல்கலைக்கழகம், தியேட்டர் மற்றும் 80க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்கள் இந்த வீடியோவில் காட்டப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

வைரலான 'முகாப்'பின் மாதிரி வீடியோ