நைஜரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்திற்குள் ரஷ்ய துருப்புக்கள் நுழைந்தன
ரஷ்ய இராணுவ வீரர்கள், நைஜரில் உள்ள ஒரு விமானத் தளத்திற்குள் நுழைந்துள்ளனர். அந்த விமானத்தளம் குறிப்பாக அமெரிக்க துருப்புக்கள் தங்கியுள்ள இடம் என ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார். இது அமெரிக்கப் படைகளை நாட்டிலிருந்து வெளியேற்ற, நைஜரின் இராணுவ ஆட்சியின் முடிவைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேற்கு ஆபிரிக்க தேசமான நைஜரை ஆளும் இராணுவ ஆட்சியின் அதிகாரிகள், அமெரிக்காவிடம் அதன் கிட்டத்தட்ட 1,000 இராணுவ துருப்புகளை நாட்டிலிருந்து திரும்பப் பெறுமாறு கூறியுள்ளனர். கடந்த ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறும் வரை, ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று, மில்லியன் கணக்கான மக்களை இடம்பெயர்த்த கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வாஷிங்டனுடன் கைகோர்த்திருந்த நிலையில் தற்போது அவர்களை வெளியேற கூறியுள்ளது நைஜர் அரசு.
ஆப்பிரிக்கா நாடுகளை தங்கள் இருப்பை தக்க வைக்க முயலும் வெளிநாடுகள்
ஒரு மூத்த அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி, "ரஷ்ய படைகள் நைஜரின் தலைநகரான நியாமியில் உள்ள டியோரி ஹமானி சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்ததாக இருக்கும் ஏர்பேஸ் 101 இல் ஒரு தனி ஹேங்கரைப் பயன்படுத்துகின்றன என்றார். வாஷிங்டனில் உள்ள நைஜீரிய மற்றும் ரஷ்ய தூதரகங்கள் கருத்துக்கான கோரிக்கைக்கு உடனடியாக பதிலளிக்கவில்லை. மேற்கத்திய அரசாங்கங்களிலிருந்து தங்களைத் தூர விலக்கிக் கொள்ள ஆர்வமுள்ள அதிகாரக் குழுக்கள் கொண்டுவந்த ஆட்சிக் கவிழ்ப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும், பல ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து படைகளை நகர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. அதே நேரத்தில் பிரெஞ்சு படைகள் மாலி மற்றும் புர்கினா பாசோவில் இருந்து வெளியேற்றப்பட்டன. இந்த வேளையில், ரஷ்யா ஆப்பிரிக்க நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்த முற்படுகிறது.