Loading...
ஆய்வகத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்? தீவிர நிமோனியாவால் பெண் ஆய்வாளர் பலி; ரஷ்யாவில் பிளேக் நோய் பரவும் அபாயம்
ரஷ்யாவில் பிளேக் நோய் பரவும் அபாயம்

ஆய்வகத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்? தீவிர நிமோனியாவால் பெண் ஆய்வாளர் பலி; ரஷ்யாவில் பிளேக் நோய் பரவும் அபாயம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 05, 2026
07:56 am

செய்தி முன்னோட்டம்

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் அமைந்துள்ள பிளேக் நோய் ஆராய்ச்சி மையத்தை சேர்ந்த 28 வயதான பெண் ஆய்வாளர் ஒருவர் தீவிர நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பிற்கு ஆபத்தான பாக்டீரியா தொற்று காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் நூற்றுக்கணக்கானோர் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

விபத்து

ஆய்வகத்தில் நடந்த விபத்து?

சைபீரியாவின் இர்குட்ஸ்க் பிளேக் எதிர்ப்பு ஆராய்ச்சி மையத்தில் பணியாற்றி வந்த தார்யா ஷிபிலோவா என்ற 28 வயது பெண் ஆய்வாளர், கடந்த செப்டம்பர் 29 அன்று தீவிர நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இரு தினங்களில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தான் உயிரிழப்பதற்கு முன், உயிருள்ள ஆபத்தான பாக்டீரியாக்கள் அடங்கிய சோதனைக் குழாய் ஒன்று ஆய்வகத்தில் எதிர்பாராதவிதமாக உடைந்ததாக ஷிபிலோவா மருத்துவப் பணியாளர்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மங்கோலிய எல்லைக்கு அருகில் உள்ள புரியாடியா பகுதியில் களப்பயணத்தில் இருந்தபோதே அவருக்கு நோய் அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன.

தனிமைப்படுத்தல்

3 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தல்

ஆய்வாளர் ஷிபிலோவா உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்தவர்களைக் கண்டறியும் பணியில் ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அவர் சிகிச்சை பெற்ற ஷெலெகாவ் மருத்துவமனை உட்பட 3 மருத்துவமனைகள் தனிமைப்படுத்தப்பட்டு, சுமார் 200 பேர் வரை மருத்துவக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இதுவரை தொடர்பில் இருந்த எவருக்கும் நோய் அறிகுறிகள் தென்படவில்லை என்றும், மேற்கொள்ளப்பட்ட ஆய்வகப் பரிசோதனை முடிவுகள் 'நெகட்டிவ்' என வந்துள்ளதாகவும் இர்குட்ஸ்க் ஆளுநர் இகோர் கோப்சேவ் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

உறுதிப்படுத்தல்

பிளேக் நோயா? உண்மை மறைக்கப்படுகிறதா?

இந்த உயிரிழப்பிற்கு 'நுரையீரல் அழற்சி பிளேக்' காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இருப்பினும், ரஷ்ய சுகாதார முகமையான 'ரோஸ்போட்ரெப்நாட்சோர்' இதுவரை பிளேக் தொற்றை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

"பாதுகாப்பு கவச உடைகள் அணிந்து பணியாற்றும் இத்தகைய உயர் பாதுகாப்பு ஆய்வகங்களில் சோதனைக் குழாய் உடைந்ததால் மட்டுமே தொற்று ஏற்பட்டது என்பதை ஏற்க முடியாது. உண்மையான காரணத்தை அரசு வெளிப்படையாக தெரிவிக்காமல் மறைக்க வாய்ப்புள்ளது."

நிலைமையைக் கட்டுப்படுத்த ரஷ்யாவின் தலைமைச் சுகாதார மருத்துவர் அன்னா பொபோவா மாஸ்கோவிலிருந்து சைபீரியாவிற்கு நேரடியாக விரைந்துள்ளார்.

ADVERTISEMENT

தொற்று விவரங்கள்

நுரையீரல் அழற்சி பிளேக் என்றால் என்ன?

'யெர்சினியா பெஸ்டிஸ்' பாக்டீரியாவால் ஏற்படும் இந்த நோய், பாதிக்கப்பட்ட நபரின் இருமல் மற்றும் தும்மல் மூலம் வெளிப்படும் நீர்த்துளிகள் வழியாக மனிதருக்கு மனிதர் எளிதில் பரவக்கூடியது.

காய்ச்சல், தலைவலி, மூச்சுத்திணறல், நெஞ்சு வலி மற்றும் இருமலின் போது ரத்தம் கலந்த சளி வெளிப்படுதல் ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாகும்.

சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால் நுண்ணுயிர் எதிர்ப்பி மருந்துகள் மூலம் இதனைக் குணப்படுத்த முடியும்.

ADVERTISEMENT