பல்கலைகழகத்திற்குள் துப்பாக்கி சூடு: அமெரிக்காவில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவின் நார்மன் நகரில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்திற்குள் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்ததாக அந்த பல்கலைக்கழகம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது.
துப்பாக்கியுடன் நுழைந்த அந்த நபர் பல்கலைக்கதிற்குள் துப்பாக்கியை வைத்து சுட்டதாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் எங்கு சென்றார் என்று தெரியாததால் அவரை தீவிரமாக தேடும் பணி பல்கலைக்கழகத்திற்குள் நடைபெற்றது. இதனால், மாணவர்கள் சவுத் ஓவல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
"வான் வ்லீட் ஓவல் மைதானத்தில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் இருக்கிறார். உடனே ஏதாவது செய்யுங்கள். ஓடுங்கள். மறையுங்கள். அல்லது போராடுங்கள்!" என்று மாணவர்களுக்கு அந்த பல்கலைகழகம் ட்வீட் மூலம் வலியுறுத்தி இருந்தது.
அமெரிக்கா
நாஷ்வில் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு
அதன் பிறகு, பல்கலைக்கழகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டு சந்தேக நபர் வளாகத்திற்குள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
போலீஸாரின் விரைவான நடவடிக்கையை பல்கலைக்கழக தலைவர் ஜோசப் ஹரோஸ் பாராட்டினார்.
"அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்தனர். எங்கள் அவசரகால நெறிமுறைகள் உடனடியாக செயல்படுத்தப்பட்டன. மாணவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகம் பாதுகாப்பாக உள்ளது," என்று ஹரோஸ் கூறி இருந்தார்.
சில நாட்களுக்கு முன், அமெரிக்காவின் நாஷ்வில் என்ற இடத்தில் உள்ள பள்ளியில் இதே போல துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
அந்த துப்பாக்கி சூட்டின் போது, இரண்டு 9 வயது சிறுமிகள், ஒரு 9 வயது சிறுவன், இரண்டு ஆசிரியர்கள் மற்றும் ஒரு பள்ளி பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.