Page Loader
ரோப்லாக்ஸ் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்த கனக்கார்டு நிறுவனம், ஏன்?
வாங்குவதற்கான பரிந்துரையைப் பெற்ற ரோப்லாக்ஸ் நிறுவனப் பங்குகள்

ரோப்லாக்ஸ் பங்குகளை வாங்குவதற்கு பரிந்துரை செய்த கனக்கார்டு நிறுவனம், ஏன்?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 14, 2023
09:44 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல ஆன்லைன் கேமிங் நிறுவனமான ரோப்லாக்ஸூக்கு வளர்ச்சிக்கான அறிகுறிகள் இருப்பதாகக் கூறி, அதன் பங்குகளை வாங்கலாம் எனப் பரிந்துரை செய்திருக்கிறது கனடாவைத் தலைமையகமாகக் கொண்ட கனக்கார்டு என்ற நிதிச் சேவை நிறுவனம். தற்போது 40.28 டாலர்கள் விலையில் வர்த்தகமாகி வருகின்றன ரோப்லாக்ஸ் நிறுவனப் பங்குகள். இந்த பங்குகளுக்கான இலக்கு விலையை 48 டாலர்களாக நிர்ணயித்திருக்கிறது கனக்கார்டு. குழந்தைகளுக்கான கேமிங் தளமாகத் தொடங்கப்பட்டு, இன்று புதிய விதமான கேமிங் அனுபவத்தை மெட்டாவெர்ஸ் என்னும் மெய்நிகர் தளத்தின் மூலமாகக் கொடுத்து வருகிறது ரோப்லாக்ஸ் . வெறும் ஆன்லைன் விளையாட்டுத் தளமாகச் செயல்படாமல், சமூகவலைத்தளங்களைப் போல சமூகவிளையாட்டுத் தளமாக உருவெடுத்திருருக்கிறது ரோப்லாக்ஸ்.

அமெரிக்கா

ரோப்லாக்ஸின் பங்குச்சந்தை அறிமுகம்: 

2021-ல் அமெரிக்க பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டன ரோப்லாக்ஸ் நிறுவனப் பங்குகள். ரோப்லாக்ஸ் நிறுவனத்திற்கும், அது வழங்கி வரும் சேவைக்கும் எதிர்காலத்தில் என்ன விதமான தேவை இருக்கப்போகிறது என்பதை மூதலீட்டாளர்களால் யூகிக்க முடியாமல், அதனை மதிப்பிடவும் முடியாமல் அந்நிறுவனப் பங்குகள் ஏற்ற இறக்கமாகவே இருந்து வந்தது. மெட்டாவெர்ஸ் என்பது தற்போது தான் வளர்ந்து வரும் ஒரு தளமாக இருக்கிறது. அதனை இணையப் பயனர்கள் ஏற்றுக்கொண்டு ஒரு முன்னணி தளமாக வளர்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன. அப்படி இருக்கும் பட்சத்தில், மெட்டாவெர்ஸ் தளத்தில் தற்போதே ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் ரோப்லாக்ஸூக்கு வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கருதி, நம்பிக்கையில்லாத முதலாம் காலாண்டு முடிவுகளையும் கடந்து, மேலும் இரண்டு நிதிச் சேவை நிறுவனங்கள் வாங்குவதற்கான பரிந்துரையை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.