எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்திற்கு மன்னிப்பு கோரினார் வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன்
பிரிட்டன்: எடிட் செய்யப்பட்ட அன்னையர் தின புகைப்படத்தை அதிகாரபூர்வ பக்கத்தில் பகிர்ந்ததற்கு வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார். வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தங்களது அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இருந்து, அன்னையர் தினத்தை முன்னிட்டு ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். பிரிட்டனில் கொண்டாடப்படும் அன்னையர் தினத்தை முன்னிட்டு தனது மூன்று குழந்தைகளுடன்(ஜார்ஜ், சார்லோட் மற்றும் லூயிஸ்) சிரித்த முகத்துடன் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் நேற்று பகிர்ந்திருந்தார். ஆனால், அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்பதை சில செய்தி நிறுவனங்களின் கம்ப்யூட்டர்கள் காட்டி கொடுத்துவிட்டன. அதனால், அந்த புகைப்படத்தின் உண்மைத்தன்மையை சந்தேகித்த ஊடகங்கள், அதை விமர்சிக்க தொடங்கின.
அந்த புகைப்படத்தால் ஏற்பட்ட குழப்பங்கள்
அந்த புகை படத்தில் இளவரசி சார்லோட்டின் இடது கையும் அவரது உடையும் சரியாக பொருந்தாமல் இருக்கிறது என்பதை சிலர் கண்டறிந்து கூறினர். அந்த புகைப்படத்தில் இளவரசி கேட் மிடில்டன் தனது திருமண மோதிரத்தை அணியவில்லை என்றும் சிலர் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், எடிட் செய்யப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்ததற்கு இளவரசி கேட் மிடில்டன் மன்னிப்பு கேட்டுள்ளார். "பல அமெச்சூர் புகைப்படக் கலைஞர்களைப் போலவே, நானும் அவ்வப்போது என்னுடைய எடிட்டிங் திறனை சோதித்து கொள்வேன். நேற்று நாங்கள் பகிர்ந்த குடும்பப் புகைப்படத்தால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் அன்னையர் தினத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாடினீர்கள் என நம்புகிறேன். சி", என்று அவர் கூறியுள்ளார்.