NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார் 
    அரச கடமைகளுக்கு அதிகாரப்பூர்வமாக திரும்பும் தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை

    பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளார் 

    எழுதியவர் Venkatalakshmi V
    May 30, 2024
    04:02 pm

    செய்தி முன்னோட்டம்

    வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டன் தனது புற்றுநோய் சிகிச்சையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக கூறப்படுகிறது.

    எனினும் அவர் அரச கடமைகளுக்கு அதிகாரப்பூர்வமாக திரும்பும் தேதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

    இருப்பினும், அவர் "100% மீண்டும் மீண்டு வருவார்" என்று வேனிட்டி ஃபேருக்கு ஆதாரங்கள் உறுதிப்படுத்தின.

    இளவரசி தனது சிகிச்சைக் காலத்தில் ராயல் ஃபவுண்டேஷன் சென்டர் ஃபார் எர்லி சைல்டுஹுட் மற்றும் அதன் பணிக்குழுவின் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும், அவரது உடல்நலம் இப்போது அவரது முதன்மையான முன்னுரிமையாக உள்ளது.

    முன்னேற்றம்

     இளவரசி கேட் மிடில்டனின் உடல்நிலை முன்னேற்றம்

    கிறிஸ்மஸ் தினத்திலிருந்து அரச கடமைகளுக்காக பொதுவெளியில் தோன்றுவதிலிருந்து விலகியிருந்த மிடில்டன், தனது தடுப்பு கீமோதெரபி சிகிச்சையால் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    வேனிட்டி ஃபேரிடம் தெரிவித்ததன்படி,"அவர் மருந்துகளை பொறுத்துக்கொள்கிறார் என்பதும், உண்மையில் மிகவும் சிறப்பாக செயல்படுவதும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நிச்சயமாக, இது மிகவும் சவாலான மற்றும் கவலையளிக்கும் நேரமாக இருந்தது. அனைவரும் அவருடனே இருக்கின்றனர்-இளவரசர் வில்லியம், அவரது பெற்றோர், மற்றும் அவருடைய சகோதரி மற்றும் சகோதரன்".

    இளவரசி கேட் பங்கெடுக்க முடியாத நிலையில், இளவரசர் வில்லியம் அரச கடமைகளை நிறைவேற்றி வருகிறார்.

    ஒப்புதல்

    மருத்துவக் குழு ஒப்புதல் அளித்த பிறகு அவர் பணிக்குத் திரும்புவார்

    அந்த செய்தியின்படி, இளவரசி பணிக்கு திரும்புவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை அதேபோல அவசரமும் இல்லை.

    இளவரசி குணமடைந்த பின்னர், மருத்துவக் குழுவிடமிருந்து ஒப்புதல் கிடைக்கும் போது அவர் பணிக்கு திரும்புவார்.

    இளவரசி கேட் மிடில்டன் கடந்த மார்ச் மாதம் தான் புற்றுநோயால் கண்டறியப்பட்டதாக அறிவித்தார்.

    அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மிடில்டன் ராயல் ஃபவுண்டேஷன் சென்டர் ஃபார் எர்லி சைல்டுஹுட் செயல்பாடுகள் குறித்து தகவல்களை கேட்டறிந்து வந்தார்.

    எவ்வாறாயினும், கென்சிங்டன் அரண்மனை செய்தித் தொடர்பாளர், இது அவர் உடனடியாக வேலைக்குத் திரும்புவதற்கான அறிகுறியாகக் கருதப்படக்கூடாது என்று அப்போது தெளிவுபடுத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கேட் மிடில்டன்
    பிரிட்டன்
    புற்றுநோய்

    சமீபத்திய

    போர்ப்பதற்றம் காரணமாக ஐபிஎல் 2025 தொடர் நிறுத்தம்; பிசிசிஐ அறிவிப்பு ஐபிஎல் 2025
    பாகிஸ்தான் விமானப்படையின் AWAC-ஐ நேற்றிரவு இந்தியா சுட்டு வீழ்த்தியது: அதன் சிறப்புகள் என்ன? இந்தியா
    பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியிலும் கெத்தாக நிற்கும் இந்திய பங்குச் சந்தைகள்; காரணம் என்ன? பங்குச் சந்தை
    இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் காரணமாக CA தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன தேர்வு

    கேட் மிடில்டன்

    கேட் மிடில்டன் வீட்டிலிருந்தபடியே அரண்மனை அலுவல்களை கவனிக்கிறார் என கென்சிங்டன் அரண்மனை தகவல் அரச குடும்பம்
    இளவரசி கேட் மிடில்டனின் புதிய வீடியோவும் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதா? இணையவாசிகள் மீண்டும் சந்தேகம் இங்கிலாந்து

    பிரிட்டன்

    காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அவதார் சிங் காந்தா இங்கிலாந்தில் உயிரிழந்தார் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 1 இந்தியா
    வரலாற்று நிகழ்வு: இந்தியா பாகிஸ்தான் ஏன் பிரிக்கப்பட்டது- பகுதி 2 இந்தியா
    லண்டன்: உச்சத்தை தொட்ட வீட்டு வாடகையால் மக்கள் அவதி  லண்டன்

    புற்றுநோய்

    சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம்: அதன் வரலாறு மற்றும் முக்கியத்துவம் பற்றி அறிக உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: புற்றுநோய் செல்கள் உருவாக்கும் காரணிகள் இதோ உடல் ஆரோக்கியம்
    உலக புற்றுநோய் தினம்: இந்தியாவில் காணப்படும் புற்றுநோயின் வகைகள் உடல் ஆரோக்கியம்
    புற்றுநோயிலிருந்து முழுமையாக மீண்டார் டென்னிஸ் ஜாம்பவான் மார்ட்டினா நவ்ரத்திலோவா டென்னிஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025