NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / உலகம் செய்தி / 'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி 

    'அப்பாவி குழந்தைகளின் மரணம் மிகவும் வேதனை அளிக்கிறது': உக்ரைன் போரை நிறுத்த கோரினார் பிரதமர் மோடி 

    எழுதியவர் Sindhuja SM
    Jul 09, 2024
    06:06 pm

    செய்தி முன்னோட்டம்

    போரில் அப்பாவி குழந்தைகள் உயிரிழப்பது இதயத்தை உலுக்குவதாகவும், மிகுந்த வேதனை அளிப்பதாகவும் உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினிடம் தெரிவித்துள்ளார்.

    "போரோ, மோதல்களோ, பயங்கரவாத தாக்குதல்களோ எதுவாக இருந்தாலும், மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட ஒவ்வொருவரும் உயிர் பலி ஏற்படும் போது வேதனை அடைகிறார்கள். ஆனால், அப்பாவி குழந்தைகள் கொல்லப்படும்போது, ​​அப்பாவி குழந்தைகள் இறப்பதைப் பார்க்கும்போது, ​​மனதைக் கனக்கச் செய்கிறது, அந்த வலி மிக பெரியது. இதுபற்றி நான் ஏற்கனவே உங்களுடன் விவாதித்திருக்கிறேன்,'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

    ரஷ்யா 

    அமைதியை மீட்டெடுக்க இந்தியா உறுதுணையாக இருக்கும்: பிரதமர் மோடி 

    நேற்று உக்ரைனில் உள்ள முக்கிய குழந்தைகள் மருத்துவமனையை ரஷ்யா ஏவுகணைகளால் தாக்கியதாகவும், நாடு முழுவதும் உள்ள மற்ற நகரங்கள் மீது ஏவுகணை மழை பொழிந்ததாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.

    இதனால், 41 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இது குறித்து ரஷ்ய அதிபரிடம் பேசிய பிரதமர் மோடி, "உக்ரைனில் நடந்த போரைப் பற்றி திறந்த மனதுடன் விவாதிக்க முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். மேலும் போரைப் பற்றிய கருத்துக்களை நாங்கள் மிகவும் மரியாதையுடன் பகிர்ந்துகொண்டோம்" என்று இன்று மாஸ்கோவில் புதினுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது மோடி கூறினார்.

    நாட்டில் அமைதியை மீட்டெடுப்பதற்கு "எல்லா வழிகளிலும்" ஒத்துழைக்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் மேலும் புதினிடம் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரஷ்யா
    இந்தியா
    பிரதமர் மோடி
    விளாடிமிர் புடின்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    ரஷ்யா

    65 உக்ரைன் போர்க் கைதிகளை ஏற்றிச் சென்ற ரஷ்ய விமானம் விபத்துக்குள்ளானது உக்ரைன்
    ரஷ்யாவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியமர்த்தப்பட்ட பாகிஸ்தான் ISI உளவாளி கைது  இந்தியா
    "இந்தியா அமெரிக்காவை பலவீனமாக பார்க்கிறது": நிக்கி ஹேலி பகிரங்க குற்றச்சாட்டு இந்தியா
    ரஷ்யாவின் எண்ணெயை வாங்கும் இந்தியாவின் முடிவை திடமாக ஆதரித்து பேசிய எஸ்.ஜெய்சங்கர்  இந்தியா

    இந்தியா

    விஜய் மல்லையாவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது விஜய் மல்லையா
    பானி-பூரியில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனத்தைக் கண்டறிந்துள்ளது கர்நாடக உணவுப் பாதுகாப்புத் துறை கர்நாடகா
    கேரளாவில் பருவமழை தீவிரமடைந்தது: 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை கேரளா
    இம்மாதம் நடைபெறுகிறது நீட் முதுகலை தேர்வு: தேர்வுக்கு 2 மணி நேரத்திற்கு முன்னதாக வினாத்தாள்கள் தயாரிக்கப்படும் நீட் தேர்வு

    பிரதமர் மோடி

    பிரதமர் மோடியின் அமைச்சரவையில் பதவியேற்றுள்ள இளைய மற்றும் மூத்த அமைச்சர்கள் யார் யார்? இந்தியா
    PMAY திட்டத்தின் கீழ் 3 கோடி குடும்பங்களுக்கு வீடு கட்டி தர மத்திய அரசு முடிவு  இந்தியா
    புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்?  மத்திய அரசு
    'மோடியின் குடும்பம்' என்ற முழக்கத்தை அனைவரும் கைவிடலாம் என பிரதமர் மோடி பதிவு  இந்தியா

    விளாடிமிர் புடின்

    புதினுடன் ரகசிய சந்திப்பு நடத்திய பெலாரஸ் அதிபருக்கு திடீர் உடல் நல பாதிப்பு  உலகம்
    இரண்டு நாட்களில் ரஷ்யாவை அதிர வைத்த இராணுவ கிளர்ச்சி ரஷ்யா
    வாக்னர் கிளர்ச்சியின் எதிரொலி: புதிய மசோதாவை முன்மொழிய இருக்கிறது ரஷ்யா ரஷ்யா
    ரஷ்ய கிளர்ச்சி: பெலாரஸுக்கு நாடு கடத்தப்பட்டார் வாக்னர் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025