Page Loader
பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி
இன்று நடந்த பேச்சு வார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் UAE பயணம்: அபுதாபியில் கல்லூரியை அமைக்கிறது ஐஐடி

எழுதியவர் Sindhuja SM
Jul 15, 2023
06:11 pm

செய்தி முன்னோட்டம்

பிரதமர் நரேந்திர மோடி தனது இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு இன்று(ஜூலை 15) சென்றடைந்தார். அவரை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் வரவேற்றார். இரு நாட்டு தலைவர்களுக்கும் இடையே இன்று நடந்த பேச்சு வார்த்தையில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்திய வங்கிகள், எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காகவும், இருநாட்டு வங்கிகளின் கட்டண அமைப்புகளை ஒன்றோடொன்று இணைப்பதற்காகவும் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டன.

சுய

இந்தியா-UAEயிக்கு இடையிலான வர்த்தகத்தில் 20% வளர்ச்சி

இந்த தகவலை அறிவித்த பிரதமர் மோடி, "இது இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையிலான ஒத்துழைப்பின் மிக முக்கியமான அம்சமாகும். இது மேம்பட்ட பொருளாதார ஒத்துழைப்புக்கு வழி வகுக்கும். மேலும், சர்வதேச பண பரிவர்த்தனைகளை எளிதாக்கும்" என்று கூறியுள்ளார். இது தவிர, அபுதாபியில் ஐஐடி கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்காக இரு நாடுகளின் கல்வி அமைச்சகங்களும், ஐஐடி-டெல்லியும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபருடனான சந்திப்பைத் தொடர்ந்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் மோடி, "கடந்த ஆண்டு இரு நாடுகளும் விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதில் இருந்து இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு இடையிலான வர்த்தகத்தில் 20% வளர்ச்சி ஏற்பட்டுள்ளது." என்று தெரிவித்தார்.