Page Loader
காத்மாண்டு: ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து நொறுங்கிய விமானம், 18 பேர் உயிரழந்ததாக தகவல்
5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது

காத்மாண்டு: ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்து நொறுங்கிய விமானம், 18 பேர் உயிரழந்ததாக தகவல்

எழுதியவர் Venkatalakshmi V
Jul 24, 2024
12:00 pm

செய்தி முன்னோட்டம்

நேபாள தலைநகரம் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் (TIA) சௌர்யா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் 19 பேர் இருந்ததாகவும், விமானத்தில் விமானத்தின் தொழில்நுட்ப பணியாளர்கள் மட்டுமே இருந்தனர் என்றும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர். விமானி மட்டும் தீவிர காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்தைத் தொடர்ந்து விமானத்தில் இருந்து வெடித்த தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்மாண்டுவில் இருந்து பொக்காராவுக்கு விமானம் புறப்பட்டுக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

விமான விபத்து

மீட்பு

மீட்பு மற்றும் கடந்தகால விபத்துகள்

விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், சம்பவத்தை தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். மற்ற உயிரிழப்புகள் அல்லது உயிர் பிழைத்தவர்கள் பற்றிய தகவல்கள் தற்போது கிடைக்கவில்லை. இந்த விபத்து நேபாளத்தின் துரதிர்ஷ்டவசமான விமானப் விபத்துகளின் வரலாற்றில் சேர்க்கிறது, 2010 முதல், நேபாளத்தில் குறைந்தது 12 விமான விபத்துக்கள் நடந்துள்ளன. ஜனவரி 2023 இல், எட்டி ஏர்லைன்ஸ் விமானம், பொக்காரா அருகே விபத்துக்குள்ளானது. இதன் விளைவாக விமானத்தில் இருந்த 72 பேர் உயிரிழந்தனர். மே 2022 இல் முஸ்டாங் மாவட்டத்தில் தாரா ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணம் செய்த 22 நபர்களில் ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.