பாரீஸ் ஒலிம்பிக் 2024: இஸ்ரேலியர்கள் வர தேவையில்லை என்று பிரான்ஸ் எம்.பி கூறியதால் சர்ச்சை
ஜூலை 26 ஆம் தேதி தொடங்கும் பாரிஸ் ஒலிம்பிக்கிற்கு இஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் வரவேற்கப்படவில்லை என்று கூறி ஒரு பிரெஞ்சு இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்(MP) அரசியல் சர்ச்சையை கிளப்பி உள்ளார். பாலஸ்தீனியர்கள் வசிக்கும் காசா பகுதி மீது இஸ்ரேல் போர் நடத்தி வரும் நிலையில், அவரது இந்த கருத்து வெளியாகி உள்ளது. இந்நிலையில், அவரது கருத்துக்கு பதிலளித்த ஒரு மூத்த அமைச்சர், "இது யூத-விரோதம்" என்று கூறியுள்ளார். பிரான்ஸ் அன்போட்(LFI) கட்சியை சேர்ந்த சட்டமியற்றுபவர் தாமஸ் போர்ட்டஸ் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துக்களை கூறியுள்ளார். பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மான் அவருக்கு பதிலளித்துள்ளார்.
"இஸ்ரேலியர்கள் தான் அதிக ஆபத்தில் உள்ளனர்": யூத நிறுவனங்களின் பிரதிநிதி
பிரான்சில் உள்ள யூத நிறுவனங்களின் பிரதிநிதி கவுன்சிலின் தலைவர் யோனாதன் அர்ஃபியும் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ளார். "ஒலிம்பிக் போட்டிகளில் ஏற்கனவே இஸ்ரேலியர்கள் தான் அதிக ஆபத்தில் உள்ளனர்" என்று அர்ஃபி கூறியுள்ளார். 1972 இல் முனிச் விளையாட்டுப் போட்டியில் பாலஸ்தீனிய பயங்கரவாதிகளால் 11 இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறிய, அதனால் இஸ்ரேலிய வீரர்கள் ஏற்கனவே ஆபத்தில் உள்ளனர் என்று கூறியுள்ளார். LFI, காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை மையமாக வைத்தே கடந்த மாதம் ஐரோப்பிய தேர்தல்களில் பிரச்சாரம் செய்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.