
பஹல்காம் பயங்கரவாதிகளை 'சுதந்திரப் போராளிகள்' என்று குறிப்பிட்ட பாகிஸ்தான் துணைப் பிரதமர்
செய்தி முன்னோட்டம்
பயங்கரவாத அமைப்புகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இந்திய சுமத்திய குற்றச்சாட்டுகளை மறுத்து, ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தாக்குதலை கண்டிக்கையில், குற்றவாளிகளை "சுதந்திர போராளிகள்" என்று பாராட்டியுள்ளார் பாக்., வெளியுறவு அமைச்சர் இஷாக் தார்.
இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தானின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான தார், "ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் தாக்குதல்களை நடத்தியவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களாக இருக்கலாம்" என்று கூறினார்.
இந்தத் தாக்குதல்களை இஸ்லாமாபாத்துடன் தொடர்புபடுத்தி, பாகிஸ்தானுக்கு எதிராக பல ராஜதந்திர தாக்குதல்களை இந்தியா அறிவித்த ஒரு நாளுக்குப் பிறகு அமைச்சரின் கருத்துக்கள் வந்துள்ளன.
இந்தியாவின் நடவடிக்கையில் மிகப்பெரியது சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்ததும், பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்ததும் ஆகும்.
எதிர்வினை
சிந்து நதி நீர் ஒப்பந்தம் இடைநிறுத்தியதற்கு பாகிஸ்தான் எதிர்வினை
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது குறித்து தார்,"பாகிஸ்தானில் 240 மில்லியன் மக்களுக்கு தண்ணீர் தேவை...அதை நீங்கள் நிறுத்த முடியாது. இது ஒரு போர் நடவடிக்கைக்கு சமம். எந்தவொரு இடைநீக்கம் அல்லது அத்துமீறலும் ஏற்றுக்கொள்ளப்படாது" என்றார்.
இந்தியா, பாகிஸ்தானை மிரட்டினால் அல்லது தாக்கினால், அதேபோன்ற பதிலடியை இந்தியா கொடுக்கும் என்றும் தார் எச்சரித்தார்.
"பாகிஸ்தான் நேரடியாக தாக்கப்பட்டால், அதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்" என்று அவர் கூறினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், இந்தியா, பாகிஸ்தான் முழுவதும் தாக்குதல்களைத் திட்டமிடுவதாகக் கூறி, "நாங்கள் அவர்களை நேரடியாகவே பழிவாங்குவோம். இந்தியாவால் நமது குடிமக்கள் பாதிக்கப்பட்டால், இந்திய குடிமக்களும் பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள். அது பழிக்குப் பழியாக இருக்கும்" என்று கூறினார்.