'2030க்குள் எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி தேவை உச்சத்தை எட்டும்': சர்வதேச எரிசக்தி நிறுவனம்
தூய்மையான எரிசக்திகளை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருப்பதால், எண்ணெய், எரிவாயு மற்றும் நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களுக்கான தேவை 2030க்குள் உச்சத்தை எட்டும் என்று சர்வதேச எரிசக்தி நிறுவனம்(IEA) கணித்துள்ளது. ஏற்கனவே இந்த தசாப்தத்தில் புதைபடிவ எரிபொருட்களுக்கான தேவை அதிகரித்துள்ளதாகவும், புதைபடிவ எரிபொருட்களின் தேவை அதிகரிப்பது இதுவே முதல்முறை என்றும் IEA தெரிவித்துள்ளது. இந்நிலையில், தூய்மையான ஆற்றலை நோக்கி உலகம் நகர்வதை தடுக்க முடியாது என்று கூறிய IEAவின் நிர்வாக இயக்குநர் ஃபாத்திஹ்-பிரோல், தூய்மையான ஆற்றல்களை அரசாங்கங்கள், வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், இன்று உலகளவில் பயன்பாட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களை விட 2030இல் பத்து மடங்கு அதிக எலெக்ட்ரிக் வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
'புதைபடிவ எரிபொருட்களின் தேவையை இன்னும் கட்டுப்படுத்த வேண்டும்': IEA
முக்கியமான உலக சந்தைகள், தூய்மையான ஆற்றலை ஆதரிக்க முடிவு செய்ததால் இன்று மாற்றம் நிகழ்ந்துள்ளதாகவும் சர்வதேச எரிசக்தி நிறுவனம் கூறியுள்ளது. சீனாவும் அதிகமாக தூய்மையான எரிசக்தியை பயன்படுத்த தொடங்கியுள்ளதால் இந்த மாற்றத்தில் சீனாவும் பெரும் பங்கு வகிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் உலகளாவில் விற்பனை செய்யப்பட்ட 50% எலெக்ட்ரிக் வாகனங்கள் சீனாவில் தான் விற்பனையாகி இருக்கிறது. இதன் மூலம், 'தூய்மையான ஆற்றல் மையம்' என்ற தனது நிலையை சீனா உலகிற்கு நிரூபித்து காட்டியுள்ளது. புதைபடிவ எரிபொருள் தேவை உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், உலகளாவிய வெப்பநிலையை கட்டுப்படுத்தும் பாரிஸ் ஒப்பந்தத்தின் நோக்கத்தை பூர்த்தி செய்ய புதைபடிவ எரிபொருட்களின் தேவையை இன்னும் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் IEA எச்சரித்துள்ளது.