Page Loader
அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் நகரில் பதட்டம்
செனட் வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா போலீசார்

அமெரிக்காவின் யு.எஸ். கேப்பிடோல் நகரில் பதட்டம்

எழுதியவர் Venkatalakshmi V
Aug 03, 2023
08:45 am

செய்தி முன்னோட்டம்

அமெரிக்காவின் செனட் சபை வளாகம் அமைந்துள்ள யு.எஸ். கேப்பிடோல் போலிசாருக்கு நேற்று ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டு, செனட் சபை கட்டடத்தில் துப்பாக்கி சூடு நடைபெற போவதாக கூறியதையடுத்து, அங்கே இருந்த பொது மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இதனை தொடர்ந்து, வளாகம் முழுவதும் சோதனை நடத்திய போலீசார், சந்தேற்குரிய எந்த நபரும் சிக்கவில்லை எனவும், ஆயுதம் ஏதும் கிடைக்கவில்லை எனக்கூறினர். இதனையடுத்து, அது போலி தகவலாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இருப்பினும், போலீசார் அங்கே பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதே வளாகத்தில், முன்னாள் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில்,டிரம்ப் தோல்வியடைந்ததை தொடர்ந்து, கலவரக்காரர்கள் அங்கே நெருப்பு வைத்து, செனட் அலுவலகத்தை சூறையாடினர் என்பது குறிப்பிடத்தக்கது

ட்விட்டர் அஞ்சல்

அமெரிக்காவில் பதட்டம்